உரும்பிராய், அரசடி மற்றும் இணுவில் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் இன்று யாழ். உரும்பிராய் கிழக்கு, அரசடி மற்றும் இணுவில் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. உரும்பிராய் கிழக்கில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு இன்றைய நிலையில் இந்த வட மாகாணசபைத் தேர்தலின் முக்கியத்துவம் பற்றியும் தமிழ் மக்கள் அனைவரும் தவறாது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் விளக்கமளித்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பெரும்பான்மை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து யாழ். அரசடியில் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றினார். இதனையடுத்து இன்றுமாலை இணுவில் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்று இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் உலகநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வலி தெற்கு பிரதேசசபைத் தலைவர் பிரகாஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், அனந்தி, சீ.வீ.கே. சிவஞானம், இ.ஆனோல்ட் ஆகியோர் உரையாற்றினார்கள். இத் தேர்தல் கருத்தரங்குகள் மற்றும் பரப்புரைக் கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.