தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் அனந்தி சசிதரன் வீட்டில் இராணுவம் தாக்குதல்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டிற்கு நேற்று நள்ளிரவு இரண்டு இராணுவ ட்ரக் வண்டிகளில் வந்து சுற்றிவளைத்த இராணுவத்தினர் அவரது வீட்டிற்குள் அத்துமீறி பிரவேசித்து அங்கிருந்தவர்கள்மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் காரணமாக 14பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுள் பவ்ரல் அமைப்பின் யாழ் மாவட்டக் கண்காணிப்பாளரான சுகாஸ் என்பவரும் அடங்குகின்றார்.  இத்தாக்குதலின்போது வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதன்போது காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.