கூட்டமைப்பு பிரதிநிதிகள் வேட்பாளர் அனந்தியின் பாதுகாப்பு குறித்து ஆராய்வு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டிற்குள் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து நள்ளிரவு தாக்குதல் நடத்தியதில் 14பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன், கொழும்பு மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி ஆகியோர் இன்றுகாலையில் வேட்பாளர் அனந்தி சசிதரனின் சுழிபுரம் இல்லத்திற்குச் சென்று பாதுகாப்பு நிலைமைகள் சம்பந்தமாக ஆராய்ந்துள்ளனர்.