வட மாகாணசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது-
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 25 வருடங்களின் பின் இடம்பெற்ற வட மாகாணசபைத் தேர்தலின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் 213,907 மொத்த வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களையும், முல்லைத்தீவில் 28,226 மொத்த வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், கிளிநொச்சியில் 37,079 மொத்த வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் கூட்டமைப்பு பெற்றுள்ளது. இதேவேளை வவுனியாவில் 41,225 மொத்த வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், மன்னாரில் 33,118 மொத்த வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் கூட்டமைப்பு) கைப்பற்றியுள்ளது. இதன்படி கூட்டமைப்பு மொத்தம் 28 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வடமாகாணத்திற்கான இரண்டு போனஸ் ஆசனங்களும் கூட்டமைப்புக்கே கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளன.