தனது சம்பளத்தை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார் திரு.சித்தார்த்தன் .
வட மாகாணசபையின் கன்னி அமர்வு வடமாகாண சபையின் புதிய கட்டடத்தில் இன்றுகாலை ஆரம்பமானது. இதன்போது தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள் இடம்பெற்றன. இதில் தவிசாளராக திரு. கந்தையா சிவஞானமும் உபதவிசாளராக திரு. அன்ரனி ஜெகநாதனும் தெரிவுசெய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன், எதிர்க்கட்சி தலைவர் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்த மாகாண சபைக்கூடான தனது சம்பளத்தை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கவுள்ளதாகவும் அதுபோல் மற்றைய அங்கத்தவர்களும் மனம்வைத்து உதவினால் சுமார் 60 குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டுசெல்லக் கூடியதாய் இருக்குமென்றும் குறிப்பிட்டார்.