ணுவிலில் உயிருள்ளவரை நட்பிருக்கும் குறும்படம் வெளியீடு-

யாழ். இணுவில் அறிவாலயத்தில் இன்றுகாலை குறும்பட வெளியீட்டு நிகழ்வொன்று இடம்பெற்றது. உயிருள்ளவரை நட்பிருக்கும் என்கிற பெயரிலான இந்த குறும்பட வெளியீட்டு நிகழ்வினை திரு. ஞானசூரியர் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். இணுவிலைச் சேர்ந்த திரு. கௌரீசன் அவர்களும் அவருடைய நண்பர்களும் இந்த குறும்படத்தை தயாரித்து இயக்கியிருந்தனர். இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வணிகத்துறை பீடாதிபதி பேராசிரியர் திரு.தேவராஜா அவர்கள் கலந்துகொண்டு மேற்படி குறும்படத்தினை வெளியிட்டு வைத்தார். சிறப்பு விருந்தினராக திரு. கு.விக்னேஸ் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. பா.கஜதீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில்; இளைஞர்கள், பெண்கள் ஊர் பிரமுகர்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.