கல்வியிலும், விளையாட்டிலும் முன்னேற மாகாணசபை நடவடிக்கை- தர்மலிங்கம் சித்தார்த்தன்-
யாழ். பருத்தித்துறை, தம்பசிட்டி உதயத்தாரவை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தீபாவளி விளையாட்டு விழா இன்றுமாலை இடம்பெற்றது. உதயத்தாரகை விளையாட்டுக் கழகத் தலைவர் திரு. செந்தூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த இந்நிகழ்வின்போது பல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதுடன், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கிவைத்ததுடன், சிறப்புரையும் ஆற்றினார். இங்கு உரையாற்றிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், விளையாட்டின் முக்கியத்துவம், கல்வியின் முக்கியத்தும் என்பன குறித்து விளக்கியதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக பின்தங்கிய நிலையில் இப்பகுதி மாணவர்களும், இளைஞர்களும் இருக்கின்றனர். இந்த மாணவர்களும், இளைஞர்கள் விளையாட்டிலும், கல்வியிலும் முன்னேற வேண்டும். இதற்காக எங்களுடைய வட மாகாணசபை முழுமையான முயற்சி எடுத்து இவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்குமென்று கூறினார். இந்த நிகழ்வில் பெண்கள், இளைஞர்கள், ஊர்ப் பிரமுகர்கள் என மிகப் பெருந்தொகையானோர் கலந்துகொண்டிருந்தனர்.