Header image alt text

கைதடி மத்தி விநாயகர் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துரையாடல்-

0

1401519_462913833826353_259321239_o11457721_462151293902607_157866146_n

யாழ். கைதடி மத்தி விநாயகர் சனசமூக நிலையத்தில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உ0றுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளார். விநாயகர் சனசமூக நிலையத்தின் தலைவர் செல்லையா மயூரன் அவர்களும், சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்களும், பொதுமக்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். இதன்போது அந்தப் பகுதியின் நிலைமைகள் தொடர்பிலும், பிரதேசத்தில் நிலவும் தேவைகள், குறைபாடுகள் பற்றியும் மாகாணசபை உறுப்பினர் திரு. சித்தார்த்தன் அவர்கள் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. திரு. பிரகாசன் கஜவர்ணன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது வட மாகாணசபையின் அதிகாரங்கள், செயற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வவுனியா முன்னாள் உப நகரபிதா, புளொட் அமைப்பின் முக்கியஸ்தர், திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களினால் தீப திருநாளை முன்னிட்டு கோவில்குளம் அன்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற முதியோர், முன்னாள் போராளிகள் மற்றும் போரில் விழுப்புண்ணுற்றவர்களும் என 150 பேருக்கு புத்தாடைகள் அன்பளிப்பு. 

IMG_6530கோவில்குளம் சிவன் கோவில் அன்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற போரினால் பாதிக்கபட்டு உடைமைகள், உறவுகள் அனைத்தையும் இழந்த எமது உறவுகளான  முதியோர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் போரில் விழுப்புண்ணுற்றவர்களும் என 150ற்கும்  மேற்பட்ட எமது உறவுகளுக்கு தீப திருநாளை முன்னிட்டு கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையினால் அன்பளிப்பு செய்யபட்ட ஆடைகளை வவுனியா கோவில்குள இளைஞர் கழக ஸ்தாபகரும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், முன்னாள் உப நகரபிதாவுமான திரு.க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களினால்  இன்று கையளிக்கபட்டது.

மேற்படி நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் கோவில்குளம் இளைஞர் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பபட்டிருந்தது. இதில் அதிதியாக கலந்து கொண்ட கழகத்தின் ஸ்தாபகரிடம் அங்குள்ள நமது உறவுகள் தங்கள் வாழ்க்கை நிலை பற்றி கருத்து தெரிவிக்கையில்…

தாங்கள் மிகவும் மனவேதனைகளுடன் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் போராளிகளான தங்கள் பிள்ளைகளை விடுதலைப் போராட்டத்தில் இழந்ததால் தான் தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டதாக பெற்றோர்கள் சிலர் கவலை தெரிவித்தனர்.  போராட்டத்தில் கால், கைகளை இழந்த போராளிகள் கருத்து தெரிவிக்கையில் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட காரணத்தினால் சமூகத்தினராலும், உறவுகளாலும் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் தங்களை வந்து பார்த்து உதவி செய்ய யாருமே முன் வருவதில்லை என்றும் சிவன் கோவில் நிர்வாக சபையினர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மனிதாவிமான அடிப்படையில் தான் தங்களை கவனித்து வருவதாகவும் கூறினர். அத்துடன் நாட்டின் விடுதலைக்காக போராடியதால் தான் தாங்கள் இன்று  இந்த ஆசிரமத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டது என்றும் கண்ணீர் மல்க கூறி தயவு செய்து தமக்கு உதவுமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கழகத்தின் ஸ்தாபகர் திரு.க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் எதோ ஒரு வகையில் இவர்களின் இந்த நிலைக்கு தமிழர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் பதில் சொல்ல வேண்டிய இக்கட்டான ஒரு சூழ்நிலையில் தான் இருகின்றோம். ஆசிரமங்களில் வாழும் எமது மக்கள் இன்று பொருளாதார நெருக்கடியில் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். வறுமையில் வாடுவோரின் அளவு இன்னும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதில் நாங்கள் வேதனைப்படும் விடயம் என்னவெனில் மேற்படி பாதிக்கப்பட்டோரை அவர்களின் உறவுகள் கூட நேரில் வந்து பார்ப்பது கிடையாது என்பது தான்.

வெளி நாடுகளில் வாழும் அவர்களின் உறவுகள், நண்பர்கள் கூட தங்களை கைவிட்டு விட்டதாக கூறுகின்றனர். உதவி செய்ய முடியாமல் இருந்தாலும் இவர்கள் இருக்கும் இந்த நிலைமையில் அவர்களுடன் தொடர்பை வைத்திருந்தாலே அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் என்று கூறினார். அத்துடன் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்ற நல்ல உள்ளங்கள் தயவு செய்து உதவ முன் வர வேண்டும். நம் இனத்தின் விடுதலைக்காக போராடிய போராளிகளின் உணர்வுகளை நாம் நிச்சயமாக மதிக்க  வேண்டும். அமைப்பு  வேறாக இருந்தாலும்  நானும் ஒரு போராளி என்கின்ற அடிப்படையில் அவர்களின் வேதனையினை என்னால் இலகுவாக உணர முடிகின்றது. எந்த அமைப்பு என்பது முக்கியமில்லை எல்லா போராளிகளும் போற்றப்பட வேண்டியவர்கள் தான். உறவுகள் மற்றும் சமூகம் போராளிகளை ஒதுக்குவது மிகவும் வேதனையான விடயமாக இருகின்றது.

இன்றைய சூழலில்  முதியோர்கள், போராளிகள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகள்  என ஆயிரக்கணக்கான நம் உறவுகள் அநாதை ஆசிரமங்களில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றனர். நூறில் ஒன்று தான் இந்த கோவில்குள அன்பக மக்கள். இன்னும் எத்தனையோ அன்பகங்கள் வடமாகாணம் முழுவதும் இருகின்றது. இந்த நிலை மாற வேண்டும் இதன் மாற்றத்தை நாங்கள் தான் உருவாக்க வேண்டும். இன்றைய தீப திருநாளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அணைத்து தமிழ் உறவுகளிடமும் நான் பணிவாக கேட்டுக்கொள்ளும்  ஒரு விடயம் தயவு செய்து உங்களால் முடிந்த உதவியை அது சிறிய உதவியாக  இருந்தாலும் பரவாயில்லை செய்யுங்கள் என்று வேண்டி நிற்கிறேன்.

முக்கிய குறிப்பு                       இந்த ஆசிரமத்தில் வசிக்கும் போராளிகளின் பெற்றோர் 10 பேருக்கு உடல் நிலை சற்று மோசமாக இருக்கின்ற காரணத்தினால்இ வைத்தியர்கள் அவர்களுக்கு தண்ணீர் ஊற்றி பயன்படுத்தப்படும் மெத்தை ‘றயவநச டிநன’ பாவிக்கும் படி கூறியுள்ளனர். இதற்குரிய உதவியினை ஆசிரம நிருவாக சபையினர் என்னிடம் கேட்டுள்ளனர். உதவ விரும்பும் உள்ளங்கள் நேரடியாகவோ அல்லது எங்கள் கழகத்தினூடாகவோ உங்கள் உதவிகளை செய்ய முடியும்.

நன்றி.

தொடர்புகளுக்கு

திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்),

கோவில்குள இளைஞர் கழகம் இல 58

5ம் ஒழுங்கை கோவில்குளம், வவுனியா.

0094 779942797, 0094 242222527

IMG_6510IMG_6498IMG_6496IMG_6491IMG_6488IMG_6485IMG_6483IMG_6480IMG_6476IMG_6473IMG_6457IMG_6452

IMG_6552 (1)IMG_6530IMG_6519

வலி. வடக்கு வீடழிப்பு தொடர்பில் அறிவிக்கவில்லை-யாழ் அரச அதிபர்-

யாழ். வலி. வடக்கில் வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக தனக்கு எந்தவித அறிவித்தலும் கிடைக்கப்பெறவில்லை என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றுபகல் அரச அதிபரை ஊடகவியலாளர்கள் சந்தித்து வலி.வடக்கு பிரச்சினை தொடர்பாக எதுவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? என கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வலி.வடக்கில் பொதுமக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக இதுவரை எனக்கு எந்தவித உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை. வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக ஊடகங்கள் மூலமே அறிந்து கொண்டேன். அது தொடர்பாக பிரதேச செயலர்கூட இதுவரை எனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இப்பிரச்சினை தொடர்பாக உயர் மட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அறிந்து கொண்டேன் எனவும் அரச அதிபர் கூறியுள்ளார். நாவற்குழி பிரதேசத்தில் வீடமைப்பு அதிகார சபையினரால் காணிகள் வழங்கப்படுவது தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டதா? என ஊடகத்தினர் கேட்டபோது, நாவற்குழி பிரதேசத்தில் காணிகள் பங்கிட்டு வழங்கப்படுவது தொடர்பாக வீடமைப்பு அதிகார சபையினரால் இதுவரை எனக்கு அறிவிக்கப்படவில்லை. இக் காணிகள் ஏற்கனவே வீடமைப்பு திட்டத்திற்காகவே வீடமைப்பு அதிகார சபையிடம் வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் தற்போது அந்த திட்டத்திற்காக காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது அது தொடர்பாக அறிவித்து இருக்க வேண்டும். ஆனால் எனக்கு அறிவிக்கப்படவில்லை என பதிலளித்துள்ளார்.

யாழ். அரச அதிபர் ஜப்பான் தூதரக அதிகாரிகள் சந்திப்பு-

யாழ். மாவட்டத்தில் ஜப்பானின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் தேவைகள் குறித்தும் யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்கும் அந்நாட்டு தூதரக உயரதிகாரிகளுக்கும் இடையில் கலந்துடையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றுகாலை நடைபெற்ற இக் கலந்துரையாடலில் ஜப்பான் தூதரகத்தைச் சேர்ந்த எல்.நாசி .பி.சினோசி உள்ளிட்ட ஐவர் பங்கு கொண்டிருந்தனர். சந்திப்பினையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், யாழ்.மாவட்த்தில் மீள்குடியேற்றப்பட்ட பல குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கப்படவேண்டிய தேவையுள்ளது. அதனைவிட வாழ்வாதாரத் தொழில் துறைகளான மீன்படி, விவசாயம் என்பனவற்றையும் முன்னேற்ற வேண்டியுள்ளது. எனவே இவ்விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன என்றார்.

அரச தலைவர்கள் மாநாடு-

22வது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு ஆரம்பமாவதற்கு இன்னும் 11 நாட்களே எஞ்சியுள்ளன. இந்நிலையில், கொழும்பு நகரை மையப்படுத்தி மாநாடு இடம்பெறவுள்ளதன் காரணமாக நகரை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. கொழும்பு நகரின் பல வீதிகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த மாற்றங்களை எதிர்வரும் 8ஆம் திகதிக்குள் நிறைவிற்கு கொண்டு வர எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இதனிடையே, பல வீதிகள் புனரமைக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபையின் தொழிற்துறை பிரிவின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க உயர்மட்ட பிரதிநிதிகள் வருகை-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார செயலர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் எதிர்வரும் 10ஆம் திகதிமுதல் நாட்டிற்கு வருகைதரவுள்ளனர். எதிர்வரும் 11ஆம் திகதிமுதல் வெளிவிவகார அமைச்சர்கள் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ரொட்னி பெரேரா கூறியுள்ளார். வெளிநாடுகளின் அரச தலைவர்கள் 14ஆம் திகதிமுதல் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு வரவுள்ள அரச தலைவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இலங்கை – இந்திய கடற்படையின் கூட்டு பயிற்சி-

இலங்கை – இந்திய கடற்படையின் கூட்டுப் பயிற்சிகள் கோவாவை அண்மித்த கடற்பரப்பில் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. இப் பயிற்சிகளில் கலந்துகொள்ளும் நோக்கில், கடற்படையின் சமுத்திர கப்பல் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமாகும் இந்த பயிற்சி எதிர்வரும் 08ஆம் திகதிவரை இடம்பெறும் என கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார். இலங்கை – இந்திய கடற்படைகளுக்கு இடையில், வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இந்த கூட்டுப் பயிற்சிகள் கடந்த வருடம் திருகோணமலை கடற்பரப்பில் இடம்பெற்றதையும் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய நினைவுகூர்ந்தார்.

வயது வந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு-

இலங்கையில் வயது வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதன் காரணமாக, எதிர்வரும் 28 வருட காலப்பகுதியினுள், பாரிய சமூக பிரச்சனைகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு சபையின் தலைவர் சுமணா ஆரியதாச இந்த எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். நாட்டின், முதியோர் தொகை அதிகரிப்பைப் போல சிறார் தொகையும் வெகுவாக அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 2041ஆம் ஆண்டளவில், ஐவரில் நால்வர் வயதானவர்களாக இருப்பர் எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழில் கிறிஸ்தவ ஆலயம்மீது கல் வீச்சு-

யாழ். புன்னாலைக் கட்டுவன் பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயம்மீது நேற்றிரவு ஒயில் ஊற்றி கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த கல்வீச்சில் தேவாலயத்தின் 26 யன்னல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேவாலய நிர்வாகத்தினரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சுக்குப் பெயர் மாற்றம்-

துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சானது நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சாக பெயர்மாற்றப்பட்டுள்ளது. பெயர்மாற்றம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை இன்றையதினம் பெற்றுக்கொண்டதாக துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

பிரித்தானியா செல்வதற்கான பிணை வைப்பீடு இரத்து- பிரித்தானியாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் மூவாயிரம் பவுண்ட்ஸ்களை பிணைப் பணமாக செலுத்த வேண்டும் என்ற கட்டாய திட்டத்தை இரத்துச் செய்யவுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட ஆறு ஆபத்தான நாடுகளிலிருந்து தமது நாட்டுக்கு பயணிப்போர் இவ்வாறான பிணைப் பணத்தை செலுத்த வேண்டும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கானா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து Read more