பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சுன்னாகம் வாழ்வகத்திற்கு விஜயம்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இன்றுமாலை சுன்னாகம் வாழ்வகத்திற்கு விஜயம் செய்திருந்தனர். யாழ். சுன்னாகம் வாழ்வகத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து ஒரு தொகை நிதியினை வழங்கியிருந்தார். இந்த நிதியினைக் கொண்டு செப்பனிடப்பட்ட வாழ்வகத்தின் உள்வீதியினை அ.விநாயகமூர்த்தி அவர்களும், தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் நேரில் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்;த்தி அவர்கள், இந்த வாழ்வகத்தின் பணிகளுக்காக இன்னமும் நிதி உதவிகளை வழங்குவதற்கு எண்ணியுள்ளேன். அதனைக் கொண்டு வாழ்வகத்தின் பணிகளை சிறப்பாக முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். என்று தெரிவித்தார். வாழ்வகத்தின் உள்வீதியைப் புனரமைக்க உதவியமைக்காக வாழ்வக இயக்குநர் ஆ.ரவீந்திரன் அவர்களும், வாழ்வகத்தைச் சேர்ந்த துஷ்யந்தி நாகராஜாவும் இதன்போது நன்றி தெரிவித்து உரையாற்றினார்கள்.