தமிழ் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் ஜனன தினம்-

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் 112ஆவது ஜனன தினத்தையொட்டி யாழ். குருநகரில் அமைந்துள்ள அன்னாருடைய உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்றுகாலை இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறில் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி மேற்கு பிரதேசசபை தலைவர் நாகரஞ்சினி ஐங்கரன், கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான விந்தன், பரஞ்சோதி ஆகியோரும் ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நினைவுக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பரஞ்சோதி, விந்தன் ஆகியோர் அமரர் ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்களின் சிறப்புப்பற்றி உரையாற்றினார்கள்.