வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையத்தில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்துரையாடல்-

யாழ்.பருத்தித்துறை வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையத்தில் சனசமூக நிலைய தலைவர் ரட்ணவடிவேல் உள்ளிட்ட சனசமூக நிலைய அங்கத்தவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டுக் கழகத்தினரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் இன்றுபகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கலைமணி சனசமூக நிலைய தலைவர் ரட்ணவடிவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலின்போது பிரதேச மக்களின் குறைநிறைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தந்து வாக்களித்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களும் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் நனறியினைத் தெரிவித்துக் கொண்டார்கள். இதனையடுத்து கலைமணி சனசமூக நிலைய கட்டிடத்தினை அவர்கள் பார்வையிட்டார்கள். இந்த சனசமூக நிலையத்தின் கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்படாதிருப்பதை சுட்டிக்காட்டிய சனசமூக நிலைய நிர்வாகத்தினர் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்ய உதவுமாறும்இ வீதிகளைப் புனரமைத்துத் தருமாறும், கலைமணி சனசமூக நிலைய விளையாட்டுக் கழகத்திற்கு நிரந்தரக் கட்டிடமொன்றை அமைக்க உதவுமாறும் கேட்டுக்கொண்டனர். இதன்போது சனசமூக நிலையத்தின் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்திசெய்ய தம்மாலான உதவிகளைச் செய்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களும் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் உறுதியளித்தனர்.