அல்வாய் வடமத்தி பிரதேச நிலைமைகள் தொடர்பில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மக்களுடன் கலந்துரையாடல்-

1 (2)யாழ்ப்பாணம் அல்வாய் வடமத்தி குமுதெனி சனசமூக நிலையத்தில் சனசமூக நிலைய தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டுக் கழகத்தினர் ஆகியோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் இன்றுமுற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 1 (4)1 (9)1 (8)இதன்போது பிரதேச மக்களின் குறைநிறைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தந்து வாக்களித்தமைக்காக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களும் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் அனைவருக்கும் நனறியினைத் தெரிவித்துக் கொண்டார்கள். இந்த கலந்துரையாடலின்போது முக்கியமாக அக்கிராமத்தின் மிகப் பிரதானமான இரண்டு வீதிகள் கடந்த முப்பது வருடகாலமாக மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து கேட்பாரற்று காணப்படுவதாகவும் அவற்றை திருத்தி அமைப்பதற்கு உதவுவதுடன், மேற்படி குமுதெனி சனசமூக நிலைய மைதானத்தினை திருத்தியமைத்துத் தருமாறும் சனசமூக நிலைய நிர்வாகத்தினரும், ஊர்ப் பிரமுகர்களும், பொதுமக்களும் கேட்டுக் கொண்டார்கள். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள், தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து ஒருதொகையினை மேற்படி குமுதெனி வாசிகசாலையின் மைதான திருத்த வேலைகளுக்காக ஒதுக்குகின்றேன் என்று தெரிவித்தார். இங்கு கருத்துரைத்த வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வட மாகாணசபை சரியாக இயங்கத் தொடங்கியவுடன் கிராமத்தின் முக்கிய இரு பிரதான வீதிகளையும் திருத்தியமைப்பதற்கு உரிய நடவடிககை எடுப்பதாக தெரிவித்தார்.