வலி. வடக்கு மக்களின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்-
யாழ்ப்பாணம் வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்ற 6500 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை மீளவும் அம்மக்களிடம் கையளிக்க வேண்டுமென வலியுறுத்தியும், அம்மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர அனுமதிக்கப்பட வேண்டுமெனக் கோரியும் யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்றுகாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வீடுகளையும், காணிகளையும் இழந்து அகதி முகாம்களில் அவல வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கின்ற மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை உள்ளிட்ட வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களால் தமது அவலவாழ்வு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும், தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியமர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட வலி.வடக்கு மக்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிறீதரன் ஆகியோரும், வட மாகாண அமைச்சர் குருகலராஜா, வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், சீ.வி.கே சிவஞானம், அனந்தி சசிதரன், சுகிர்தன், பிரதேச சபைத் தலைவர்கள் நாகரஞ்சினி ஐங்கரன், பிரகாஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். இதன்போது பெருந்திரளான உள்ளுர் மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்களும் செய்தி சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வேண்டிநிற்கும் மக்கள் அமைப்பின் தலைவர் குணபாலசிங்கம் அவர்கள் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்நின்று ஒழுங்குபடுத்தியிருந்தார். இப்போராட்டமானது தொடர் போராட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் நடைபெறவுள்ளது.
தர்மலிங்கம் சித்தார்த்தன்,