முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் நேற்று புதன் அதிகாலை இடிக்கப்பட்டது.

131113084737_mullivaikkalmullivaikalmullivaykkal-memorial-parksஇலங்கையில் அரசு – புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக இந்தியாவின் தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி சுற்றுச் சுவர் நேற்று புதன் அதிகாலை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு அமைய மாநில வருவாய்த் துறை அதிகாரிகள் பெரும் இயந்திரங்களை கொண்டு சுவர்களை ததகர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும் அப்பகுதி மக்களுக்குமிடையே நிகழ்ந்த மோதலின் பின்னணியில் நினைவுச் சின்னத்தை அமைக்க தலைதாங்கிய பழ நெடுமாறன் உட்பட 50 பேர் வரை கைது செய்யப்பட்டனர். அப்பகுதியில் பதட்டம் மூண்டது, அங்கே குவிந்த ஆதரவாளர்கள், பொதுமக்கள் சுவர் தகர்க்கப்பட்ட பின் இது அரசுக்குச் சொந்தமான இடம் என்று அதிகாரிகள் அங்கே அமைத்த அறிவிப்பு பலகைகளையும் ,கம்பிவேலியையும்  பிய்த்தெறிந்தனர்.
உரிய அனுமதி பெற்ற பிறகே முற்ற வளாகம் அமைக்கப்பட்டது. ஏதோ உள்நோக்கங்களுக்காக அரசு இவ்வாறு நடந்துகொள்கிறது, முள்ளிவாய்க்கால் முற்றம் தொடக்கத்திலிருந்தே பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியது, உயர்நீதிமன்ற ஆணையைப் பெற்றே அதனைத் திறக்க வேண்டியிருந்தது.
(இருந்தும் குறிப்பிட்ட நாளுக்கு முன்பே thumbபின்னணியிலேயே இன் நிகழ்வுகள் என்கின்றனர் நோக்கர்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் தமிழக அதிகாரிகளால் இடிக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களைத் திரட்டி இதை சட்டரீதியாக எதிர்கொள்ளுவோம் என்கின்றார் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர்  பழ.நெடுமாறன்.