ஊடக அடக்குமுறைக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம்-
சர்வதேச தண்டனை நிறைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஊடகத்துறைக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் இடம்பெற்றது. இலங்கை இதழியல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இளம் ஊடகவியலாளர்களை ஒரு குடையின்கீழ் ஒன்று திரட்டுவது இதன் இன்னுமொரு நோக்கமாகும். இலங்கை மற்றும் உலகில் ஊடகத்துறை மற்றும் கலைத்துறைக்கு சேவையாற்றி உயிர் நீத்தவர்கள் இதன்போது நினைவு கூறப்பட்டு, அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட இலங்கை இதழியல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர் பழனி விஜயகுமார், இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். கருத்து வெளியிடும் சுதந்திரற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.