Header image alt text

எதேச்சதிகார போக்குகளை கைவிட்டு இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் 

imagesCAD6EXE7வடமாகாண சபை செயலாளர்கள் தமது எதேச்சதிகாரமான போக்குகளை கைவிட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும். இல்லையெனில் தமது பதவிகளை இராஜினமா செய்து விட்டு புதியவர்களை நியமிக்க வழிவிட  வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது- Read more

நிவாரணம் இல்லாத வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக அரை நிர்வாணப் போரட்டம். 

prottest

இலங்கை அரசினால் நிறைவேற்றப்பட்டுள்ள 2014ம் ஆண்டுக்கான நிவாரணம் இல்லாத வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் வயதை  60 இல் இருந்து 63 ஆக அதிகரித்தமையை உடனடியாக இரத்துச் செய்யக்கோரியும் விவசாயிகளின்  நிலுவையான ஓய்வூதியத்தை செலுத்துவதற்கு நிதி ஒதுக்கு போன்ற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காகவும். வரவு – செலவுத்திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை மற்றும் வரவு – செலவுத்திட்டத்தில் விவசாயிகள் மறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று அகில இலங்கை கமநல சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது

IMG_63491486824_262647897226299_1657716817_n

வடக்கில் 372 பேருக்கு நிரந்த நியமனம்-

unnamed-351வட மாகாண சபைக்குட்பட திணைக்களங்களில் கடமையாற்றுவதற்காக 372 பேருக்கு இன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் வழங்கப்பட்டுள்ளன. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது. இதில் முகாமைத்துவ உதவியாளர்களாக 219 பேரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 107 பேரும் ஆசிரியர்களாக 26 பேரும் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 20 பேரும் நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர். இந்த நியமன கடிதங்கள் வழங்கப்பட்டவர்களுக்கு மூன்று வாரகால பயிற்சி வழங்கப்பட்ட பின்னர், 2014ஆம் ஆண்டு ஜனவரிமாதம் முதல் வட மாகாண திணைக்களங்களில் நிரந்த ஊழியர்களாக கடமையாற்றவுள்ளனர். இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜீ.எல் பீரிஸ் பதவி விலக வேண்டும்-மங்கள சமரவீர எம்.பி-

வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சரின் ஆபிரிக்க ராஜதந்திர கொள்கையானது, பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற ஆபிரிக்க கண்டத்தின் அரச தலைவர்களது எண்ணிக்கையில் புலப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது ஆபிரிக்க கொள்கையின் நிலைமையை அறிந்துக்கொள்ளக் கூடியதாக உள்ளது. அண்மைக்காலமாக வெளிவிவகாரதுறை அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், மேலைத்தேய நாடுகளின் தேவைப்பாடு தமக்கு அவசியம் இல்லை என்றும் ஆபிரிக்க நாடுகளுடன் எமது புதிய வெளிநாட்டுக் கொள்கை செயற்படுவதாக கூறியிருந்தார். ஆபிரிக்க கண்டத்தில் 19 நாடுகள் பொது நலவாய அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. எனினும் இலங்கை மாநாட்டில், வெறும் 7 நாடுகளே கலந்து கொண்டன. இதன் மூலம் அவரின் செயற்பாட்டின் தன்மை புரிகிறது என மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேச எவருக்கும் உரிமை கிடையாது-அமைச்சர் சுசில்-

imagesCA6FFD6Qஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன செய்துகொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி தற்காலிகமாகவே வடக்கு கிழக்கு பிராந்தியம் இணைக்கப்பட்டது. பின்னர், வடக்கு கிழக்கு இணைப்பு அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னர், அதுபற்றி பேச எவருக்கும் உரிமை கிடையாது இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் பீ.பீ.ஸிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு உரிமை கிடையாது. இலங்கை தனி இறையாண்மை கொண்ட ஒரு நாடு, இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகள் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. இந்தியாவில் தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில், வாக்கு சேகரிக்கும் நோக்குடன் அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்களை இலங்கை பெரிய அளவில் கணக்கில் எடுக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இரணைமடுக்குளத்தில் வரட்சி நிலைமை-

பருவமழை பொய்யாமை காரணமாக தற்போது இரணைமடுக் குளத்தினுடைய நீரின் அளவு குறைந்து காணப்படுகின்றது. கிளிநொச்சியிலுள்ள இந்த இரணைமடுக்குளம் வழமையாக நவம்பர் மாத காலப் பகுதியில் நீர் நிறைந்து வான் பாயும் நிலையில் காணப்படும். ஆனால் தற்போது நவம்பர் மாதம் முடிவடைந்த நிலையிலும் மழை பொய்யாமையின் காரணமாக இரணைமடு குளத்தினுடைய நீரின் அளவு முற்றாக வற்றிக் காணப்படுகின்றது. இவ்வருடம் இரணைமடு குளத்தில் போதுமானதளவு நீர் தேக்கி வைக்கப்படாமல் போனால் 2014ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையிலும் பாதிப்பு ஏற்படும் நிலைமை ஏற்படும்.

மாலைதீவு, பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகவேண்டுமென கோரிக்கை-

பொதுநலவாய நாடுகளி;ன் அமைப்பிலிருந்து மாலைத்தீவு விலகிக்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் மற்றும் தற்போதைய அரசின் அமைச்சர் அப்துல்லா யாமீன் ஆகியோர் இந்தக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பொதுநலவாய நாடுகள் அமைப்பு, ஏனைய நாடுகளின் உள்ளகப் பிரச்சினைகளில் தலையீடு செய்கிறது. அதேநேரம் அமைப்பின் நோக்கங்களில் இருந்து விலகிச்செல்வதாக குற்றம் சுமத்தியே இக்கோரிக்;கை முன்வைக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவில் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தோதலில் பொதுநலவாய அமைப்பு தமது தலையீட்டை மேற்கொண்டதாக அப்துல் கையூம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவிகள் நிகாப் அணியத் தடை-

கொழும்பு புறநகரான மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் நிகாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டே பல்கலைக்கழக வளாகத்தினுள் இந்த தடை விதிக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஏ.கே.டபிள்யூ. ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டு முஸ்லிம் மாணவிகள் கண்களை மட்டும் தெரியும்படியாக முகத்தை மூடி ஆடையணிய அனுமதி கோரினர். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்த பின்னர் பாதுகாப்பு விடயங்களை கருத்திற்கொண்டு அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் முஸ்லிம் பெண்கள் தலையை மறைத்து அணியும் ஹிஜாப் அணியவும் அபாயா அணியவும் எவ்வித தடையும் இல்லை. எனினும் முகத்தை மறைக்கும் விதமாக ஆடையணிவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ரஸ்ய பிரஜை கைது-

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ரஸ்ய நாட்டுப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்றுகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க அதிவேக வீதியின் 18ம் கட்டை நுழைவாயிலில் மோட்டார் சைக்கிளில் பயணித்து 6ம் கிலோ மீற்றர் பகுதியில் குறித்த ரஸ்ய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, தெற்கு அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் வேனுடன் மோதுண்டு படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு-கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ, டிரக்டர் மற்றும் சைக்கிள் என்பன பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி செல்பவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

விடுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு தகுந்த காரணங்கள் எதுவுமின்றி நீண்டகால விடுமுறை வழக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இன்றுகாலை 10.30மணியளவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதம் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்காக அனைத்து பல்கலைகழகங்களுக்கும் 9ம் திகதி தொடக்கம் 17ம் திகதிவரை விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனால் யாழ். பல்கலைக்கழகத்திற்கு மட்டும் டிசம்பர் 2ம் திகதிவரை விடுமுறை விடப்பட்டிருந்தது. எதற்காக எமக்கு மட்டும் இந்த நீண்ட விடுமுறை விடப்பட்டது? மாணவர்களுக்கு பரீட்சை நெருங்குவதாலும் பல்கலைக்கழகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவுமே இந்த விடுமுறை என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது. அரையாண்டு பருவத்திற்குரிய சகல பாடவிதானங்களும் பூர்த்தியாக்கப்பட்ட பின்னரே சில நாட்கள் பரீட்சை விடுமுறை விடப்படும். Read more

இந்திய இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இலங்கையின் 13வது சட்டத்திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்னும் நிலையில் இருந்து இந்திய அரசு ஒருநாளும் பின்வாங்காது அமைச்சர் ப.சிதம்பரம்-

131130184029_p_chidambaram_624x351_bbc_nocreditஇலங்கையிலே நடைபெற்ற இனப்படுகொலையைப் பற்றி ஒரு விரிவான, உண்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவுக்கு உண்மையான விசாரணையாக இருக்க வேண்டும். அந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் இந்தியாவின் கோரிக்கை தொடர்ந்து அந்த கோரிக்கையை இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தி வருவதாகவும். இந்தியாவின் குரல் தொடர்ந்து இப்படி ஒலிப்பதன் காரணமாகத்தான் பலநாடுகளும் இன்று அதே குரலை ஒலிக்க தொடங்கியிருப்பதாகவும், இதுவரை இதைப்பற்றி பேசாத இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இப்போது இதை பேசுவதானது இந்த விடயத்தில் இந்திய ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தார்.
இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பாஜக ஆதரவு தரவில்லை என்றும் அந்த கட்சியின் தமிழக தலைவர்கள் இலங்கை தமிழர்கள் மீது காட்டும் கரிசனை போலியானது என்று விமர்சித்தார்.
அதேவேளை இலங்கையில் தமிழர்கள் தமது அரசியல் சாசன உரிமைகளை முழுமையாக பெறுவதற்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை சீர்குலைக்க இலங்கை அரசு முயற்சி செய்வதாக குற்றம் சாட்டிய அவர், ஆனால் இதை இந்திய அரசு எதிர்ப்பதாகவும், இணைந்த வடகிழக்கில் தமிழர்கள் அனைத்து அரசியல் உரிமைகளும் பெற்றுவாழவேண்டும் என்பதை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் என்றும் கூறினார்.
இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பில் சென்னையில் 30.11.13 சனிக்கிழமையன்று நடந்த கருத்தரங்கத்தில் பேசிய இந்திய நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரம் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.