Header image alt text

ஐ.நா விசேட பிரதிநிதி முல்லைத்தீவுக்கு விஜயம்-

mayilitti people Peyani (2) Peyaniஇலங்கை வந்துள்ள உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதியும், விசேட அறிக்கையாளருமான சலோகா பெயானி, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்திருந்தார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றுகாலை விஜயம் செய்திருந்த பெயானி, அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் எல்.பி.ஆர்.மார்க் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து முல்லைத்தீவில் இறுதியாக மீள்குடியேற்றப்பட்ட கிராமமான கேப்பாபிலவு மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டதாக மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். Read more

நெடுந்தீவு கொலை- வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது-

EPDPசுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ். நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை விவகாரம் தொடர்பில் அவரது மனைவி இன்றுகாலை ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவிலுள்ள அவரது வீட்டில் வைத்தே இவர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரனும் நெடுந்தீவைச் சேர்ந்த மற்றொருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நல்லிணக்கம் குறித்து நடவடிக்கை இன்றேல் பொறுமை இழக்கும் நிலையேற்படும்-

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள், பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச சமுதாயம் பொறுமை இழந்துவிடக்கூடுமென அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவும் அமெரிக்க நட்பு நாடுகளும் இதனை வலியுறுத்திவருவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் நிருபர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார். இவ்வாறான முன்னேற்றம் இலங்கையில் ஏற்படுவதற்காக இலங்கையிலுள்ள எமது நண்பர்களுடன் நாம் மனப்பூர்வமாக வேலை செய்கின்றோம் என்றும் நிஷா பிஸ்வால் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலி கிழக்கு பிரதேசத்தில் குடியேற முடியாது-மயிலிட்டி மக்கள்-

யாழ். வலிகாமம் வடக்கு பலாலி கிழக்குப் பகுதியில் மீளக்குடியேறுவதற்கு படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தாம் மீளக்குடியேற மாட்டோம் என கோணாப்புலம் நலன்புரி நிலையத்தில் வசித்துவரும் மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, பொதுநலவாய மாநாடு நடைபெற்றபோது மயிலிட்டிப் பிரதேசத்தினைச் சேர்ந்த எம்மை பலாலி பிரதேசத்தின் கிழக்காக உள்ள காணிகளில் குடியேற்றுவதற்கு இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன்போது, குறித்த பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று அப்பிரதேசத்தில் பொதுமக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை பிரதேச செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கூட்டம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. Read more

மன்னாரில் பெண்கள் உரிமை செயற்பாட்டுக் குழுவின் பேரணி-

mannar penkal urimai (1)mannar penkal urimai (2)பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் முகமாகவும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரியும் நாளை மன்னாரில் பிரச்சாரமும், எதிர்ப்பு பேரணியும் இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மஹாலட்சுமி கிருசாந்தன் தெரிவித்துள்ளார். நாளை மன்னார் பொது நூலகத்திற்கு முன்பாக காலை 9 மணிக்கு மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. Read more

இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினை தொடர்பில் அரசுடன் பேசுவேன்-ஐ.நா பிரதிநிதி பெயானி-

Peyani (2)உள்நாட்டினுள் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடுவேன் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறப்புப் பிரதிநிதி சலோகா பெயானி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நேற்றுமாலை வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் கூறியுள்ளார். இச்சந்திப்பு பற்றி சஜீவன் மேலும் கூறுகையில், வலி வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு நலன்புரி நிலையங்களில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர். இம்மக்களுக்குச் சொந்தமாக 6,500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் படைத்தரப்பால் அண்மையில் சுவீகரிக்கப்பட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களை பிறிதொரு இடத்தில் குடியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அவரிடம் சுட்டிக்காட்டினோம். அத்துடன் தொடர்ச்சியாக உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அங்குள்ள தனியாருக்குச் சொந்தமாக வீடுகள், ஆலயங்கள் மற்றும் பாடசாலைகள் கூட இடிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதனையும் அவருக்கு எடுத்துக் கூறினோம். Read more

அமெரிக்க உதவியுடன் பளை பிரதேச வைத்தியசாலை திறப்பு–

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பளை பிரதேச மருத்துவமனையை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் செரி கார்லின் வடமாகாண சபை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் பி. சத்தியலிங்கனுடன் இணைந்து நேற்றுத் திறந்துவைத்துள்ளார். 525,000 அமெரிக்க டொலர்கள் (ஏறத்தாழ 69 மில்லியன் இலங்கை ரூபா) மொத்த செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு 24 நோயாளர் கட்டில்கள் (பிரசவ அறையுடன் கூடிய மகப்பேற்று வாட் மற்றும் குழந்தைகளுக்கான வாட் ஆகியவற்றுக்கு தலா 12 கட்டில்கள்) மற்றும் மருந்தகம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. வெளிநோயாளர் சேவையினூடாக நோய்த்தடுப்பு சுகாதார சேவையையும் இந்த மருத்துவமனை வழங்கும். எளிதாக நாடக் கூடியதும் உயர்தரமான சுகாதாரநலச் சேவையினூடாக இந்த புதிய மருத்துவமனையானது சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த சமூகங்களிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். Read more