மன்னாரில் பெண்கள் உரிமை செயற்பாட்டுக் குழுவின் பேரணி-

mannar penkal urimai (1)mannar penkal urimai (2)பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் முகமாகவும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரியும் நாளை மன்னாரில் பிரச்சாரமும், எதிர்ப்பு பேரணியும் இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மஹாலட்சுமி கிருசாந்தன் தெரிவித்துள்ளார். நாளை மன்னார் பொது நூலகத்திற்கு முன்பாக காலை 9 மணிக்கு மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, அக்கறைப்பற்று பெண்கள் அரங்கம் ஏற்பாடு செய்த பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத பிரச்சாரத்தின் அம்பாறை மாவட்ட நிகழ்வு நேற்று அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. பெண்கள் அரங்கத்தின் தலைவி வாணி சைமன் தலைமையில் அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா மற்றும் அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் வி.ஜெயரூபன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழித்து சமூகத்தில் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் பெண்கள் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அதிதிகள் வலியுறுத்திப் பேசினார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான செயல்திட்டம் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் இதன்போது வழங்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் பார்வைக்காக வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.