ஆசிய நாடுகளின் வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச இளைஞர் திருவிழா இலங்கையில்
ஆசிய நாடுகளின் வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச இளைஞர் திருவிழா அடுத்த வருடம் மே மாதம் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெற உள்ளது என இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக பொதுநலவாய இளைஞர் மாநாடு கடந்த மாதம் ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தமது இளைஞர்கள் சகல விதத்திலும் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இதனை கண்டு இம் மாநாட்டில் பங்கு பற்றிய சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் வியந்து போனதோடு அடுத்த வருடம் இதனைவிட சிறப்பான ஒரு மாநாட்டை எவ்வாறு நடத்துவது எனவும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் ஆசிய வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற உள்ள சர்வதேச இளைஞர் திருவிழா அடுத்த வருடம் மே மாதம் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபவத்தில் இடம்பெறவுள்ளது. இது பெருமைக்குரிய விடயமாகும். காரணம் இலங்கை வரலாற்று என்பதை விட ஆசிய வரலாற்றில் இடம்பெறும் முதல் நிகழ்வு இதுவாகும் என்றார்.