இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல் ஆம் ஆத்மி அதிரடி வெற்றி, காங்கிரஸ் படுதோல்வி, டில்லியில் யார் ஆட்சி? பாஜக தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்

indiaஇந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற 4 மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் நாட்டின் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.
தலைநகர் புதுடில்லியின் மாநில சட்டமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான தோல்வியை தழுவியுள்ளது.
மூன்று முறை தொடர்ச்சியாக டெல்லி முதமைச்சராக இருந்துவந்த ஷPலா தீக்ஷpத்தை, புது டில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் சுமார் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
முதல் முறையாக அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
முடிவுகள் முழுமையாக வரமுன்னரே  தன் பதவியை ஷPலா தீக்ஷpத இராஜினாமா செய்துவிட்டார்.
எனினும் டில்லியல் அடுத்து யார் ஆட்சி என்பது தெளிவில்லாமல் உள்ளது. 32 இடங்களுடன் பாஜக அதிக இடங்களை வென்றுள்ளது.
ஆட்சி அமைக்க அந்தக் கட்சிக்கு குறைந்தது இன்னும் மூன்று இடங்கள் தேவைப்படுகின்றன.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் 3-வது முறையாக பாஜக
மத்திய பிரதேசத்திலுள்ள 230 தொகுதிகளில் பாஜக 165 தொகுதிகளிலும், காங்கிரஸ் 58 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. மத்திய பிரதேசத்தில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளில் பாஜக 162 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளன. அங்கு காங்கிரஸிடமிருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த முறையைவிட ஒரு இடம் குறைவாக பெற்றாலும், 49 இடங்களுடன் அங்கு பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
அங்கு மொத்தமாகவுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 39 இடங்களையே வென்றுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகள் நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஒரு மனோநிலை வளர்ந்துள்ளதையே காட்டுவதாக பாஜக பேச்சாளர் நிர்மலா சீதாராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் .
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களிலும், இதேபோன்ற ஒரு சூழல் இருக்குமென்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகளை ஒன்றுதிரட்டுவதில் தமது கட்சியின் பிரதமர் வேட்பாளார் நரேந்திர மோடி முனைந்துள்ளார் எனவும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.