பெண்களுக்கெதிரான வன்முறையை கட்டுப்படுத்தக்கோரி கவனயீர்ப்பு பேரணி

Untitled-1_7வடக்கு கிழக்கில் பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும்  வன்முறைகளைக் கட்டுப்படுத்தக்கோரி  பெண்கள் அமைப்பினால் இன்று யாழ்ப்பாணத்தில் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்று  முன்னெடுக்கப்பட்டது. யாழ்-நீதிமன்றத்திற்கு அருகில் ஏ 9 வீதியில் இரண்டு மருங்கிலும் பெருமளவில் இன்று கலை ஒன்று கூடிய மக்கள் எதிர்ப்பு பதாகைகளையும் தாங்கியவாறு ஆரம்பித்த ஊர்வலம் மணிக்கூட்டு வீதி வழியாக ஆஸ்பத்திரி வீதியை சென்றடைந்து அவ் வீதியில் உள்ள யாழ்ப்பாண கல்லூரியின் உயர் கல்வி நிலையத்தை சென்றடைந்தது நின்றனர். யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கட்டுபடுத்த கோரியே இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் எந்த இடமானாலும் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றவுடன் துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சாட்சியங்கள் சேகரிக்கப்பட வேண்டும்
சந்தேக நபர்களுக்கு 14 நாள் தடுப்பு காவல் வழங்கப்பட்டு பின்னர் சாட்சியங்கள் போதவில்லை என தள்ளுபடி செய்வதை தடுக்க வேண்டும்
சட்ட வைத்திய பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் தடயங்கள் துரிதமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு சரியான முடிவுகளை அறிக்கைகளையும் உரிய காலத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கும் மற்றும் குடும்பத்தவருக்கும் வைத்திய அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்
பெண்கள் மீதான வன்முறைகளுக்கு நீதி விரைவாக வழங்கப்பட வேண்டும் 19995 ,1999ம் ஆண்டு தண்டனை சட்டக்கோவை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு பெண்கள் சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு உச்ச பட்ச தண்டனைகள் வழங்குவதற்கான தண்டனை சட்ட கோவையை அமுல் படுத்த வேண்டும்
பொறுப்புமிக்க நீதித்துறை அதிகாரிகள் உண்மையான நீதிக்காகவும் மனித நேயத்திற்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து ஆதரவு வழங்கி சமூகத்தில் இவ்வாறன வன்முறைகள் அதிகரிக்காமல் இருப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
வடக்கு கிழக்கு பகுதிகளில் பொலிஸ் நிலையங்களில் பெண்கள் சிறுவர் பிரிவு பலப்படுத்துவதும் அங்கே தமிழ் பேசும் பெண் பொலிசாரை கடமையில் ஈடுபடுத்தலை உறுதிப்படுத்த வேண்டும்
சமூகத்தில் உள்ள பெண்கள் ஆண்கள் அனைவரும் இணைந்து சம்பந்தப்பட்ட சட்டத்துறை வைத்திய துறை பாதுகாப்புத்துறை அரச அரச சார்பற்ற துறைகளுக்கு அழுத்தம் கொடுத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுற்கு கொண்டுவருவதற்கான செயல் வாத பயன்களை தொடர வேண்டும்.
போன்ற கோரிக்கைகள் ஊர்வலத்தில் ஈடுபட்டபவர்களால் முன் வைக்கப்பட்டது
இடர் முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு வடமாகாண பெண்கள் மாற்றத்திற்கான வலையமைப்பு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஆகியன இணைந்தே இந்த ஊர்வலத்தை  நடாத்தின கடந்த மாதம் நவம்பர் 25 ம் திகதி தொடக்கம் நாளை வரையிலான காலப்பகுதியில் உலகெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத பிரச்சாரத்தில் இணைந்து கொள்ளும் முகமாகவே இந்த ஊர்வலம் நடாத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது