இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி சுதந்திரமான நாடாக செயற்படுவதையே சர்வதேசம் விரும்புகிறது.-யசூஷி அகாஷி

imagesCAV34F3Gசிறுபான்மையினரின் உரிமைகள், வடக்கு மக்களின் நிலை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம். இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி சுதந்திரமான நாடாக செயறபடுவதனையே சர்வதேசம் எதிர்பார்க்கின்றது என இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷி தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மற்றும் வடக்கு மக்களின் உரிமைகளை வென்றெடுக்க போராடும் நிலை என்பன தமிழ் தேசியக் கூட்டமைப் புடனான கலந்துரையாடலின் போது தெரிகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான விசேட தூதுவர் யசூஷி அகாஷி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று கொழும்பில் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. பல மணி நேர கலந்துரையாடலின் பின்னர் யசூஷி அகாஷி ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிபிடுகையில்,
இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு சிக்கல்கள் உள்ளதென்பதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக வடமாகாணத்தில் இராணுவ கட்டுப்பாடுகளும் அடக்கு முறைகளும் இருக்கின்றதென்பதையே அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
மேலும் சிறுபான்மையினர் மீது மனித உரிமைகள் மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது என்ற கருத்து தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக யுத்தத்திற்கு பின்னர் சிறுபான்மை மக்கள் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் குற்றச்சாட்டாக விளங்குகின்றது.
மேலும் கூட்டமைப்புடனான இக்கலந்துரையாடலின் போது வடக்கு வாழ் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடுவதும் அரசியல் ரீதியிலான தீர்வொன்றினையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதுவும் தெளிவாக தெரிகின்றது.
ஆகவே, இவை அனைத்தும் தொடர்பிலும் நாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவோம். இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சிறுபான்மை மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து ஒற்றுமையானதொரு ஆட்சி பாதைக்கு இட்டுச்செல்லவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்தார்