மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹட்டனில் ஊர்வலம்

DSC00001_0 DSC00015மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹட்டனில் ஊர்வலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் துஸ்பிரயோகங்களையும் கண்டித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை ஹட்டனில் ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. இவ் ஊர்வலத்தில் ஹட்டன்  பொலிஸ் மற்றும் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் காரியாலயம், பிரதேச இளைஞர் சமூக சம்மேளனம் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெண்களை கொடூரர்களிடமிருந்து காப்பாற்றுவோம், சிறுவர்கள் நாளைய நாட்டின் தலைவர்கள், பெண்களின் வேலைப்பலுவை குறைப்போம் , பெண்களின்திறமைக்கு வழியமைப்போம் எனும் வாசகங்களை எழுதிய  பதாதைகளை ஏந்தி  ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீதியில் நாடகம் ஒன்றையும் ஒழுங்கமைத்திருந்தனர்.