வடமாகாண வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

npc2_CIபாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்களாகக் கடமையாற்றிய முன்னாள் தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் ஒரேயடியாக 4,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 462 பேர் பயனடைவர். வடக்கைச் சேர்ந்த கலைஞர்கள் 50 பேருக்கு அடுத்த ஜனவரி மாதம் முதல் மாதாந்தம் 5,000 ரூபா ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பள்ளி ஆசிரியர்களுக்குக் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்த 3,000 ரூபா கொடுப்பனவு நவம்பர் மாதத்திலிருந்து மீண்டும் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 1,800 பேர் பயனடைவர். வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதம் நேற்று நடந்தது. கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஒதுக்கீடுகள் விவாதிக்கப்பட்டன.

அலுவலர்களின் சம்பளக் கொடுப்பனவுகள் மற்றும் படிகள், எரிபொருள், மின்சாரம், தொலை பேசிக்கட்டணங்கள், போக்கு வரத்துப்படிகள் என்பனவற்றை உள்ளடக்கிய மீண்டுவரும் செலவினமாக 6 ஆயிரத்து 424 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் மாகாண கல்வி அமைச்சுக்கு 206 மில்லியன் ரூபாவும், மாகாண கல்வித் திணைக் களத்துக்கு 6 ஆயிரத்து 182 மில்லியன் ரூபாவும், விளை யாட்டுத் திணைக்களத்திற்கு 36 மில்லியன் ரூபாவும் பகிர்ந் தளிக்கப்பட்டன. 

மூலதன செலவினத்தில் மாகாண கல்வி அமைச்சுக்கு 200 மில்லியன் ரூபாவும், விளையாட்டுத் திணைக்களத் திற்கு 14 மில்லியன் ரூபாவும், கலாசார பிரிவிற்கு 4 மில்லி யன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள்:

தொண்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பில் முதலமைச்சருடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. நிறைவான திட்டமொன்று தயாரிக்கப்பட்டு அது முன்னெடுக்கப்படும். உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மீண்டும் கொடுப்பனவு.

 மாகாணமட்ட கண்காட்சி, கலைவிழா, கோட்டமட்ட, மாவட்டமட்ட விளையாட்டு விழாக்கள், ஆசிரியர்களுற்கான பயிற்சி, முன்பள்ளி முகாமைத்துவ குழுக்களுக்கான வலுவூட்டல் செயலமர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும்.

 வடக்கில் உள்ள 34 பிரதேச செயலகங்களிலும் கலாசார வேலைத்திட்டத்திற்காக தலா 5 லட்டசம் ரூபாவழங்கப்படும்.

கலைஞர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 50 கலைஞர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா. கலைத்துறையில் தேசிய மட்டத்தில் சிறப்பான அடைவு மட்டத்தினைப் பெறும் மாணவர்கள், சிறப்பான முறையில் கலைத்துறைக்கு பங்காற்றி வரும் ஆசிரியர்களுக்கான இந்திய கல்விச் சுற்றுலா.

 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையும் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 4 ஆயிரத்து 500 பேருக்கு தலா 500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு.

 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கின் முதலாம் கட்ட வேலை, வவுனியா மாவட்டத்தில் கபடி விளையாட்டிற்கான மைதானம்

மறுசீரமைப்பு, மன்னார் மாவட்டத்தில் பொது மைதான உள்ளக விளையாட்டரங்கின் மிகுதி வேலைகள், யாழ்ப்பாண மாவட்டத்தின் உள்ளக விளையாட்டு அரங்கின் வேலைத் திட்டங்கள் என்பவற்றிற்காக 14 மில்லியன் ஒதுக்கீடு.

 கிளிநொச்சி மாவட்டத்தில் கலாசார மண்டபம் அமைப்பதற்கான முதல் கட்ட வேலை களுக்காக 4 மில்லியன் ஒதுக்கீடு.

 போதாத ஒதுக்கீடுகளும் முன்மொழிவுகளும்

பாடசாலைகளில் சிறு திருத்த வேலைகளை மேற்கொள்வ தற்கு 42 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. ஆனால் 200 மில் லியன் ரூபா தேவை.

பாடசாலைகளின் மின் கொடுப்பனவுகளுக்காக 10.8 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. இதன் இரு மடங்கு தேவை. ஆசிரியர்களின் சம்பள நிலுவைக்கு 100 மில்லியன் ரூபா தேவை.

 ஆசிரியர் இடர் கடன் கொடுப் பனவுகளை மேற்கொள்ள 100 மில்லியன் தேவை.

12 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் வகுப்பறைக் கட்டடங்களின் நிர்மானம் மற்றும் மறுசீரமைப்புக்கும் ஆசிரிய விடுதி அமைத்தல் போன்ற அவசிய வேலைகளுக்கும் மேலும் 500 மில்லியன் ரூபா தேவை.

விளையாட்டு மைதானங்களின் புனரமைப்பு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் போன்ற வேலைத் திட்டங்களுக்காக மேலும் 100 மில்லியன் தேவை.

கலாசார மண்டபம் அமைத்தல், அரும்பொருட் காட்சியகத்தினை உருவாக்குதல் போன்ற வற்றிற்கு 100 மில்லியன் ரூபா தேவை