Header image alt text

வடக்கு ஆளுநரை அகற்றும் பிரேரணையை நாடாளுமன்றில் கொண்டுவருவோம்: த.தே.கூ .

imagesCA027L42வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிரிக்கும் வட மாகாணசபைக்கும் இடையிலான அரசியலமைப்பு மோதல் நேற்று புதிய திருப்பத்தை கண்டது. வட மாகாண ஆளுநரை அகற்றவும் பூஜித ஜயசுந்தரவை வடக்குக்கு புதிய பொலிஸ் மாஅதிபராக நியமித்ததை எதிர்த்தும் நாடாளுமன்றில் ஒரு பிரேரணையை கொண்டுவரப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடித்துக் கூறியது.
வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

 மாகாண ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்.

imagesCAA6XM3213ஆவது திருத்தச் சட்டத்திற்கமைவாக மாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையிலான இந்த கலந்துரையாடல் யாழ். தேசிய கல்வியற் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வட மாகாண செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணத்திலுள்ள மாவட்ட செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலர்கள்,  பிரதேச சபைகளின் தலைவர்கள், கணக்காளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
ஆளுநருக்கு எத்தகைய அதிகாரங்கள் அரசியலமைப்பின் எந்தெந்த சரத்துக்கள் மற்றும் விதிகள் ஊடாக வழங்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் தமக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு உரிய விளக்கங்களை ஆளுநர் வழங்கினார்.
இராணுவ பின்புலமுள்ள ஆளுநரினை மாற்ற வேண்டுமென்ற பிரேரணை கடந்த 10ஆம் திகதி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமரர் மண்டேலாவிற்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி

umc300தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த நெல்சன் மண்டேலாவிற்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
நெல்சன் மண்டேலாவின் உருவப்படம் பல்கலைக்கழக முன்றலிலுள்ள இராமநாதன் சிலையிலிருந்து மாணவர்களினால் ஊர்வலமாக கைலாசபதி கலையரங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள நினைவுத் தூபியில் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கைலாசபதி கலையரங்கில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இ.இராஜகுமாரன் தலைமையில் நினைவுப் பேருரையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புதிய அரசுத்துறைகளை உருவாக்கும் அதிகாரம் மாகாண அரசுக்கு உண்டு- டாக்டர் கே.விக்னேஸ்வரன்.

131212160252_vigneswaransrilankaformer_secretarynortheast_province_former_advisoreastern_province_281x351_bbc_nocreditஇலங்கையின் மாகாணங்களுக்கு புதிய திணைக்களங்களை (அரசுத் துறைகள்) உருவாக்கும் அதிகாரம் இருக்கிறது. முன்பு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையில் முதல்வருக்கு செயலராகவும், பின்னர் கிழக்கு மாகாண முதல்வருக்கு ஆலோசகராகவும் பணியாற்றிய டாக்டர் கே.விக்னேஸ்வரன்.
இலங்கையின் வட மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் சமீபத்தில் மாகாண கவுன்சிலில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட உரையில் புதிதாக வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து ஆகிய இரு துறைகளை உருவாக்கப்போவதாக அறிவித்திருந்த்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. Read more