இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் 10 மில்லியனுக்கு ஏலத்தில்  இரும்புக்காக மொத்தமாக அள்ளிச் செல்லப்படுகிறது.

1a(546)முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொண்டு செல்லமுடியாமல் கைவிட்டு தப்பியோடிய மக்களினதும், இறந்த மக்களினதும் உரிமைகோரப்படாத, உரிமைகோரப்பட முடியாத நிலையிலிருந்த வாகனங்கள் அனைத்தும் இரும்புக்காக கொண்டு செல்லப்படுகின்றன. ஏற்கனவே தெற்கு வியாபாரிகளால் பகுதி பகுதியாக அபகரிக்கப்பட்டவை இப்போது மொத்தமாக அள்ளிச் செல்லப்படுகிறது.
இறுதியுத்தத்தின் போது கைவிடப்பட்டு எவராலும் உரிமை கோரப்படாது காணப்பட்ட பாவனைக்கு உட்படுத்தப்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால்பத்து மில்லியனுக்கு ஏலத்தில் விற்க்கப்பட்டுள்ளன.
fig-17இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதிகளான மாத்தளன், பொக்கனை, வளைஞர்மடம், முள்ளிவாய்க்கால் மற்றும் புதுக்குடியிருப்பு இரனைப்பாலை போன்ற பிரதேசங்களில் மக்களால் கைவிடப்பட்ட வாகனங்களின் ஒரு தொகுதி கிளிநொச்சி திருநகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்தன. இதன் போது வாகனங்களின் ஆவணங்களை சமர்பித்து உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்களை தவிர எவராலும் உரிமை கோரப்படாது காணப்பட்ட பாவனைக்கு உட்படுத்தப்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ஏனைய வாகனங்களே பத்து மில்லியனுக்கு ஏலத்தில் விற்க்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதிகேதீஸ்வரன் கருத்து தெரிவிக்கும் போது கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் வாகனங்கள் உரிமையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு அவர்களினால் தங்களின் வாகனம் என உறுதிப்படுத்து வகையில் ஏதேனும் ஒரு  ஆவணத்துடன் மீள ஒப்படைக்கப்பட்டு வந்தன இந்த நிலையில் இதுவரை காலமும் பல வாகனங்கள் எவராலும் பெற்றுகொள்ளப்படாமையினாலும் இவை பாவணைக்கு உதவதாத நிலையில் இருந்தமையினாலும் அவற்றினை மாவட்டச் செயலகம் இரும்புக்காக பத்து மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளது. இதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் நீதி மன்ற அனுமதியும் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார்.