போகம்பரை சிறை ஜனவரி 1இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கையளிப்பு   சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரட்ன பல்லேகம தெரிவித்தார்.

Bogambara-140கண்டி, போகம்பரை சிறைச்சாலை வளாகம் பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலை வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் போகம்பரை சிறைச்சாலை வளாகம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. மேற்படி சிறைச்சாலை வளாகத்தை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இவ்வருட இறுதிக்குள் இங்குள்ள சிறைக்கைதிகள் அனைவரையும் பல்லேகல சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்துவிட எதிர்ப்பார்க்கிறோம் என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
மேலதிக நடவடிக்கைகள் அனைத்தும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நாடு திரும்பியதும் முன்னெடுக்கப்படும் என்றும் ஆணையாளர் கூறினார்.
போகம்பரை சிறைச்சாலை வளாகம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் அந்த சிறைச்சாலை இரண்டு வாரங்களுக்கு மக்கள் பார்வைக்காக விடப்படும். இருப்பினும் பார்வைக்கான திகதிகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை’ என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்