திருக்கேதீஸ்வரத்தில் மனித எச்சங்கள் மீட்பு-

unnamed7 unnamed8மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதிஸ்வரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு செல்லும் பாதையில் இருந்து சுமார் 75 மீற்றர் தொலைவில் குறித்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று அந்தப் பகுதியில் குடி நீர் இணைப்பை வழங்குவதற்காக பணியாளர்கள், வீதிக்கரையில் பள்ளம் தோண்டிய போது, இரண்டு மண்டையோடுகளும், வேறு சில பாகங்களும் காணப்பட்டுள்ளன. இதுபற்றி அருகாமையில் உள்ள படையினருக்கு அறிவிக்கப்பட்டு படையினரும் மன்னார் பொலீசாரும் வந்து அவற்றைப் பார்வையிட்டனர். அதனை அண்டிய ஏனைய பகுதிகளும் நாளை நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளன. குறித்த பகுதி கடந்த காலங்களில் அதியுயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டதோடு, தற்போது படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.