திருக்கேதிஸ்வரப் பகுதியில் மனித எச்சங்கள் தேடும் பணி ஆரம்பம்-

unnamed7unnamed4மன்னார், திருக்கேதிஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து குறித்த பகுதியில் இன்றுகாலை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதிஸ்வரத்திற்கு செல்லும் பாதையில் இருந்து சுமார் 75 மீற்றர் தொலைவில் நேற்றுமாலை 3 மணியளவில் குடிநீர் இணைப்பை வழங்குவதற்காக பணியாளர்கள் வீதிக்கரையில் பள்ளம் தோண்டியபோது குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றுமாலை குழி கிண்டப்பட்டபோது மூன்று மனித மண்டையோடுகளும், ஏனைய பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. உடனடியாக அருகில் உள்ள இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இராணுவம் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின் மன்னார் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை உற்பட பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்றனர். இந்நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்றுகாலை 10 மணியளவில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின் மன்னார் நீதவான் மற்றும்; சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் தோண்டப்பட்டு வருகின்றது. இதன்போது மேலும் சிதைவடைந்த நிலையில் துண்டு துண்டுகளாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் குறித்த பகுதியில் தோண்டப்பட்டு மீட்புப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள பகுதியில் தொல்பொருள் ஆராட்சி நிலையத்திற்கான இடம் என எழுதப்பட்டுள்ளது.