வட மாகாணசபை உறுப்பினர் (புளொட் தலைவர்) தர்மலிங்கம் சித்தார்த்தன் மக்கள் சந்திப்பு மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கு உதவி-

வடக்கு புன்னாலைக்கட்டுவன் சுதந்திரபுரம்

p4யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்திற்கு இன்றுமாலை விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் (புளொட் தலைவர்) திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வடக்கு புன்னாலைக்கட்டுவன் சுதந்திரபுரம் பாரதி சனசமூக நிலையத்தில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். சனசமூகநிலைய தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் p5 p6 p7 p8 p9 p10p1 p2ஊர்ப் பிரமுகர்களும், பொதுமக்களுமென பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் குறைகளை மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் கேட்டறிந்து கொண்டார். இக் கலந்துரையாடலைத் தொடர்ந்து பாரதி முன்பள்ளிச் சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களையும் சித்தார்த்தன் அவர்கள் வழங்கிவைத்தார்.

திடற்புலம்

இதனைத் தொடர்ந்து திடற்புலம் ஒளிநிலா முன்பள்ளி மற்றும் சனசமூக நிலையத்தில் வட மாகாணசபை உறுப்பினர் (புளொட் தலைவர்) திரு. சித்தார்த்தன் அவர்கள் பிரதேச மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். சனசமூக நிலையத் தலைவர் திரு.சிங்கராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலின்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் அவசியத் தேவைகள் தொடர்பில் சித்தார்த்தன் அவர்கள் கேட்டறிந்து கொண்டார். இதன்போது முன்பள்ளி சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களையும் அவர் வழங்கி வைத்தார்.

குரும்பசிட்டி

k1தொடர்ந்து குரும்பசிட்டி கலைமகள் சனசமூக நிலையத்தில் சனசமூக நிலையத் தலைவர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் குறைகள் தொடர்பில் வட மாகாணசபை உறுப்பினர் (புளொட் தலைவர்) திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கேட்டறிந்துகொண்டார். இதன்போது கலைமகள் முன்பள்ளி சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களையும் சித்தார்த்தன் அவர்கள் வழங்கிவைத்தார்.

கோண்டாவில்

வட மாகாண சபை உறுப்பினர் (புளொட் தலைவர்) திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன்  அவர்கள் கோண்டாவில் குமரன் விளையாட்டுக் கழகம் மற்றும் முன்பள்ளியில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். இதன்போது முன்பள்ளி சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களையும் சித்தார்த்தன் அவர்கள் வழங்கி வைத்தார். மேற்படி கலந்துரையாடல்களின்போது மக்களின் குறைகளைக் கேட்டறிந்துகொண்ட வட மாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இவற்றில் சில விடயங்களை உடனே நிவர்த்திசெய்து தருவதாகக் கூறியதுடன், சில விடயங்களை மாகாண சபையின் ஊடாக செய்வதாகவும் தெரிவித்தார். அத்துடன் மாகாணசபை இன்னமும் உரிய முறையில் இயங்க ஆரம்பிக்கவில்லையென்றும், ஆரம்பித்தவுடன் மக்களின் பாரிய தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு தான் முயற்சிப்பதாகவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் குறிப்பிட்டார். மேற்படி கலந்துரையாடல்களின்போது, சனசமூக நிலையங்களின் தலைவர்கள், நிர்வாகத்தினர், முன்பள்ளிகளின் நிர்வாகத்தின், ஊர்ப் பிரமுகர்கள், பெண்கள், இளைஞர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

p10 k3 k4 k7 k8 k9 k10 k11