வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மக்கள் சந்திப்பு, பாடசாலை பிள்ளைகளுக்கு உதவி-

Sithar ploteயாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்திற்கு இன்றுமாலை விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், புன்னாலைக்கட்டுவன் வடக்கு கம்பம்புலம் பாரதி பாலர் பாடசாலையில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். இதன்போது பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் குறைகளை மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் கேட்டறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து கம்பம்புலம் பாரதி பாலர் பாடசாலைச் சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களையும் சித்தார்த்தன் அவர்கள் வழங்கிவைத்தார். மேலும் புன்னாலைக்கட்டுவன் ஈவினை ஒளிநிலா முன்பள்ளியில் வட மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் இன்றுமாலை பிரதேச மக்களுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இதன்போது ஈவினை முன்பள்ளி சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களையும் அவர் வழங்கி வைத்தார். இக்கலந்துரையாடல்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் புன்னாலைக்கட்டுவன் வடக்கு அமைப்பாளர் திரு. லோகன் அவர்களும் பங்கேற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து கோண்டாவில் கிழக்கு தில்லையம்பதி சனசமூக நிலையத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் குறைகள் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கேட்டறிந்துகொண்டார். இதன்போது தில்லையம்பதி முன்பள்ளி சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களையும் சித்தார்த்தன் அவர்கள் வழங்கிவைத்தார். திரு கெங்கா அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடல்களின்போது, சனசமூக நிலையங்கள் மற்றும் முன்பள்ளிகளின் நிர்வாகத்தினர், ஊர்ப் பிரமுகர்கள், பெண்கள், இளைஞர்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.