உதயநகர் கிழக்கு, விவேகானந்தர் நகர் பாடசாலைப் பிள்ளைகளுக்கு உதவி-

u1கிளிநொச்சி உதயநகர் கிழக்கு மற்றும் 55ஆம் கட்டை, விவேகானந்தர் நகர் ஆகிய இரு கிராமங்களையும் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்றையதினம் பிற்பகல் 4.30மணியளவில் இடம்பெற்றது. இதன்படி உதயநகர் கிழக்கு கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து 160 பாடசாலைப் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் இதற்கான நிதி நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், நாகராஜா அவர்களின் தாயாரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) கிளிநொச்சி கிளை பிரதிநிதிகளும் பாடசாலைப் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர். இந்நிகழ்வின்போது திரு நாகராஜா அவர்களின் தாயாரான தர்மலிங்கம் குஞ்சரம் (தங்கம்மா) அவர்களைப் பாராட்டி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) கிளிநொச்சி கிளையினர் அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் ஒன்றையும் வழஙகிவைத்தனர்.

 u4u2u3u5u6u7u8u9u19u10u11u12u13u14u15u17u18u16