Header image alt text

வலி தெற்கு இளைஞர் கழக சம்மேளனத்தின் விளையாட்டுப் போட்டி-

v4v3யாழ். வலி தெற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் நடாத்தும் தாச்சு விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு நேற்றுமாலை உடுவில் உதயசூரியன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. வலி தெற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் திரு.விஜிதரன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. தாவடி சிறீ காளியம்பாள் விளையாட்டுக் கழகத்திற்கும், தையிட்டி வள்ளுவன் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் தாச்சி இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் வள்ளுவன் விளையாட்டுக் கழகம் 6இற்கு 2என்கின்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றியடைந்து சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது. இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. ஆனோல்ட் மற்றும் வடமாகாண தாச்சி விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத் தலைவர் திரு. சண்முகலிங்கம், சுன்னாகம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இறுதிப்போட்டி மற்றும் அதையொட்டிய நிகழ்வுகளில் ஊர்ப் பிரமுகர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

v2v7v1v8

v9v10v5v11

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தால் அவசர தொலைபேசி சேவை அறிமுகம்-

dகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அவசர தொலைபேசி சேவையொன்றினை அறிமுகம் செய்துள்ளது. 1962 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துடன் தொடர்புகொள்ள முடியும் என தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த தொலைபேசி சேவையின் ஊடாக கடவுச்சீட்டு உள்ளிட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் எனவும் தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வடமாகாணத்தில் ஆறு புதிய மீன்பிடித் துறைமுகங்கள்-

cவடமாகாணத்தில் ஆறு புதிய மீன்பிடித் துறைமுகங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு, மீசாலை, படுவக்கட்டை, இலங்கைத்துறை மற்றும் பளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இம்மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றின் நிர்மாணப்பணிகள் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படும். நிர்மாணப்பணிகளை தாய்வான் நாட்டு நிறுவனமொன்று மேற்கொள்ளவுள்ளதுடன் இப்பணிகளை 2015இல் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. படகுகள் நங்கூரமிடல் களஞ்சியசாலை உட்பட பல வசதிகளுடன் மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் இலங்கையின் சகல மீன்பிடித் துறைமுகங்களும் சர்வதேச தரத்தில் அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சு கூறியுள்ளது.

சென்னை பேச்சுவார்த்தைக்கு வடபகுதி மீனவ பிரதிநிதிகளுக்கு அழைப்பில்லை-

bஇலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைக்கு வடமாகாண மீனவ பிரதிநிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை இன்று தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சம்மேளன கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி சென்னையில் இந்திய மீனவ சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தேசிய மீனவர் பேரவையின் பொதுச் செயலாளர் இளங்கோவன் தெரிவித்திருந்தார். Read more

இலங்கை தொடர்பான ஐ.நா அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது-

navneethamஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையை ஆணையாளர் நவநீதம்பிள்ளை 2014ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளார். நாடுகளின் பிரிவு அட்டவணையின்போதே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ் அறிக்கை விவாதத்திற்காக எடுக்கப்படும்போது இலங்கை அரசின் விமர்சனங்களும் கருத்துக்களும் கோரப்படவுள்ளன. 25வது மனித உரிமைகள் ஆணையக அமர்வுகள் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி ஆரம்பமாகின்றன. இறுதிநாளான மார்ச் 28ஆம் திகதி யோசனைகள் நிறைவேற்றப்படவுள்ளன. ஏற்கனவே இந்த அறிக்கை வாய்மூலம் சமர்ப்பிக்கப்பட்டபோது மார்ச் மாதத்துக்குள் இலங்கையரசு போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை செய்யாவிட்டால் சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணையாளர் சந்திப்பு-

unnamed8இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் புதிய ஆண்டில் சந்திப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எதிர்வரும் 3ஆம் திகதி இந்த சந்திப்பை மேற்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் மாகாண சபைகள் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடனான இந்த சந்திப்பு சாதாரண சந்திப்பாகவே அமையும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேல் மற்றும் தென் மாகாண சபைகள் இந்த மாத இறுதியில் கலைக்கப்படும் எனவும் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளன.

பொலிஸாருக்கு எதிராக முறையிட தொலைபேசி இலக்கம் அறிமுகம்-

LK policeபொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு புதிய அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் டி.எம்.கே.பீ தென்னக்கோன் அறிவித்துள்ளார். பொலிஸார் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் தவறுகள் தொடர்பில் 071 0361010 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அவ்வாறு முறைப்பாடு செய்யலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனேடிய எம்.பி. ராதிகா சிற்சபேசன் இலங்கை விஜயம்-

rathiனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன் இன்று இலங்கை வந்துள்ளார். தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு செயற்படும் பல அமைப்புக்களையும் சந்தித்து அவர் பேச்சு நடத்தியுள்ளார். இதேவேளை, யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கும் இவர் விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலை அதிகாரிகள் 450 பேருக்கு இடமாற்றம்-

jailசிறைச்சாலை அதிகாரிகள் 450பேருக்கு இடமாற்றம் வழங்கப்படவிருப்பதாக தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, இந்த இடமாற்றங்கள் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் ஒரே சிறைச்சாலையில் கடமையாற்றுவதாக சுட்டிக்காட்டிய அவர், சிலருக்கு பதவியுயர்வுகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர் இராமேஸ்வரத்தில் கைது-

rameதமிழ்நாடு, இராமேஸ்வரத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகில் இலங்கை செல்ல முயற்சித்த ஒருவரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். சிலாபத்தைச் சேர்ந்த 42வயதான அருந்தவநாதன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்துள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த நிலையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 2012இல் சுற்றுலாப் பயணியாக இந்தியா சென்று விசா காலாவதியான நிலையில் அங்குள்ள அகதி முகாமொன்றில் வசித்து வந்துள்ளார். பின்னர் சட்டவிரோமான முறையில் இலங்கை செல்வதற்குத் தீரமானித்து இராமேஸ்வரம் பகுதிக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைதடி விபத்தில் ஒருவர் படுகாயம்-

kaiயாழ். கைதடி பாலத்திற்கு அருகில் இன்றுகாலை 7.35 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கைதடியிலிருந்து சாவகச்சேரியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் சாவகச்சேரியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த டிப்பர் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த கைதடி கிழக்கைச் சேர்ந்த 23வயதான தீ.தனுறாஜ் என்பவரே விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பர் வாகனம் மற்றைய வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டபோதே விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.