Header image alt text

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2014

உலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களே,  கழகத்தோழர்களே, ஆதரவாளர்களே அனைவருக்கும்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக தலைமையினதும், கிளைகளினதும்

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இனியாவது….!

பழயன மறப்போம்
மன்னிப்போம்!

புதியன சிந்திப்போம்
செயற்படுவோம்!

ஒன்றாய், ஒற்றுமையாய்,
பலமாய் நிற்போம்!

இருப்பன காப்போம்
இழந்தன மீட்போம்!
 
மானத்தோடும், மனித
நேயத்தோடும் வாழவோம்!

கோயில்குளம் பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-

k k0 k1 k3 k4 k5 k6 k7 k8வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக தலைவரும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தருமாகிய திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் வவுனியா கோயில்குளம் பகுதியில் வசிக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் இதற்கான நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன், வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக தலைவரும், புளொட் முக்கியஸ்தருமாகிய திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் மேற்படி பிள்ளைகளுக்கு இன்றையதினம் பிற்பகல் 3மணியளவில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைத்துள்ளார்.

சர்வதேச அன்னையர் தினம்-

vmotherசர்வதேச அன்னையர் தினம் வலி மேற்கு பிரதேச சபையின் அனுசரணையோடு சித்தன்கேணி அறிவொளி சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுச் சங்கத்தால் அனுஸ்டிக்கப்பட்டது இந்நிகழ்வு 31.12.2013 நேற்றுமாலை 3.00 மணியளவில் சித்தன்கேணி அறிவொளி சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் சித்தன்கேணி அறிவொளி சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுச்சங்க தலைவர் திருமதி கி.கம்சமாலினி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஜங்கரன் பிரதம விருந்தினராகவும், வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான திரு சபாநாயகம். திரு இராஜதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர் இந் நிகழ்வில் அன்னையின் சிறப்பு பற்றி சிறார்கள் பலர் உரையாற்றினார்கள் இதனைத் தொடர்ந்து வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஜங்கரன் அவர்களால் அன்னையர்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டு அன்னையர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

சர்வதேச எயிற்ஸ் தினம்-

aidsசர்வதேச எயிற்ஸ் தினம் வலி மேற்கு பிரதேச சபையின் அனுசரணையோடு அராலி ஊரத்தி அம்பாள் கடற்தொழிலாளாளர்; சங்கத்தால் அனுஸ்டிக்கப்பட்டது இந்நிகழ்வு 31.12.2013 நேற்றுமாலை 5.00 மணியளவில் அராலி ஊரத்தி அம்பாள் கடற்தொழிலாளாளர்; சங்க மண்டபத்தில் அராலி செந்தழிழ் சனசமுக நிலைய செயலாளர் செல்வி செ.மல்லிகா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஜங்கரன் பிரதம விருந்தினராகவும், வட்டுக்கோட்டை கிராமிய வைத்தியசாலை மருத்துவமாது திருமதி மனோன்மணி; சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டிருந்தனர்

ராதிகா சிற்சபேசன்மீது குடிவரவு திணைக்கள அதிகாரிகள் விசாரணை-

fஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளது. அவர், தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தான் விரும்பிய இடங்களுக்கு சென்றுவருகின்றார் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவரை வீட்டுக்காவலில் வைக்க பொலிஸாருக்கோ அல்லது இராணுவத்தினருக்கோ எவ்வித அதிகாரங்களும் இல்லை என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் டயஸ் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வந்துள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை இலங்கை குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சியில் வைத்து இன்று விசாரணை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனையிறவு விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழப்பு-

aஆனையிறவுப் பகுதியில் ஏ9 வீதியில் இன்று அதிகாலை 1மணியளவில் இடம்பெற்று விபத்தில் இளம் தாயும் சிசுவும் உயிரிழந்துள்ளதுடன், கணவர் காயமடைந்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு ஆனையிறவுப் பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றுக்குச் சென்று வழிபாடுகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே, இவர்கள் விபத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் ஒன்று இவர்கள் மீது மோதியுள்ளதாக கூறப்படுகிறது. முக்கொம்பன் பூநகரி பகுதியைச் சேர்ந்த செந்தூரன் சுலோகினி (வயது 22), செந்தூரன் கின்சிலி (பிறந்து 27நாட்கள்) ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த கணவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீனவர் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் – ஜி.கே. வாசன்-

cதமிழக மீனவர்கள் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், இந்தியா – இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஜனவரி 20ம் திகதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் நிச்சயம் சுமூக தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

யாழ். மீனவக் குடும்பங்களின் நிலைமை பரிதாபமானது-எமிலியாம்பிள்ளை-

bயாழ். மாவட்டத்திலுள்ள 50,000 மீனவக் குடும்பங்களின் நிலைமை மிக மோசமாகவும், பரிதாபமாகவும் இருப்பதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்க சமாசத்தின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்க சம்மேளனத்தில் இன்றுகாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினர்களிடமும் பல தடவைகள் கலந்துரையாடினோம். ஆனால், கலந்துரையாடல்களினால் எந்தவித முடிவுகளும் கிடைக்கவில்லை. மீனவர்கள் எல்லை தாண்டும்போது கைதுசெய்யப்படுகின்றார்கள். அவ்வாறான நிலையில்கூட அங்கத்துவ சமாசங்களிடம் கதைக்கவில்லை. இவ்வாறான சூழ்;நிலை வியப்படைய செய்கின்றது. மேலும், எதிர்வரும் 20ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு வடபகுதி மீனவச் சங்கங்களுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்படவுமில்லை. இவ்வாறான நிலைமைகள் வேதனை தருகின்றன என எமிலியாம்பிள்ளை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திடீர் விபத்துக்களால் 575 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி-

bகடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் திடீர் விபத்துக்களால் பாதிக்கப்பட்ட 575 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 217 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாக கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சிறியளவில் அதிகரித்துள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு தெற்கு வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் 131பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், இதில் திடீர் விபத்துக்களால் பாதிக்கப்பட்ட 26பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் கொழும்பு தெற்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அசேல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தொலைத் தொடர்பாடலுக்கான வரி 5 வீதத்தால் அதிகரிப்பு-

hதொலைத் தொடர்பாடலுக்கான வரி 5 வீதத்தால் இன்றுமுதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கான வரவுத் திட்டத்தின் ஊடாக, 20 வீதமாக காணப்பட்ட தொலைத் தொடர்பாடலுக்கான வரி 25 வீதமாக தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இணையத்தளம் மற்றும் ப்ரோட்பேன்ட் வலையமைப்புகளுக்கான 10வீத வரியில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட குறிப்பிட்டுள்ளார்.

விசேட பிரமுகர்களின் மேடை சரிந்ததில் பலருக்கு காயம்-

gகொழும்பு ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசேட பிரமுகர்களின் மேடை சரிந்து விழுந்தமையினால் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் ஹோட்டல் வளாகத்தில் எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்திக்கிடந்துள்ளது. நேற்றிரவு நடத்தப்பட்ட புதுவருட விருந்துபசாரத்தின்போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மகனும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் அமர்ந்திருந்த மேடையே இவ்வாறு சரிந்து வீழ்ந்ததாக கூறப்படுகிறது. கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் காயமடைந்துள்ளனர். இந்த மேடையில் சுமார் 200 பேர் வரையிலும் இருந்துள்ளனர். முழு மேடையும் சரிந்து விழுந்ததால் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

இந்திய உயர்ஸ்தானிகருக்கு முஸ்லிம் கவுன்ஸில் கடிதம்-

eஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்காவிற்கு முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது. முஸ்லிம் தீவிரவாத குழுக்களினால் புரியப்படக்கூடிய தாக்குதல்களை தடுப்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய ராஜதந்திர அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்குமாறு இந்தியா கோரியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்தே முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா இந்திய உயர் ஸ்தானிகருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், இலங்கையிலுள்ள முஸ்லிம் தீவிரவாத குழுக்களினால் இலங்கையிலுள்ள இந்திய ராஜதந்திர அலுவலகங்களுக்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற செய்தியை விரக்தியுடன் வாசித்தோம். இந்த செய்திக்கான ஆதாரமாக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசுக்கு எழுதப்பட்ட கடிதம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த எந்தவொரு ஆயுத போராட்டத்திலும் முஸ்லிம்கள் பங்கேற்கவில்லை. பல ஆத்திரமூட்டல்கள் காணப்பட்டபோதும் முஸ்லிம்கள் அமைதியாகவே இருந்துள்ளனர். எனவே இது இலங்கை முஸ்லிம்களை சந்தேகத்துடன் நோக்க வைத்துள்ளது. ஆதலால் இயன்றளவு விரைவாக உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு-

dஎதிர்வரும் 2014ம் ஆண்டு மே 18ம் திகதி அன்று உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்குமாறு கரைச்சிப் பிரதேச சபை தீர்மானமொன்றை நிறைவேற்றி ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை விடுத்திருந்தது. இம்மகஜரில் தெரிவிக்கப்பட்ட விடயம் யாதெனில், ‘யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் பல நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் இலங்கையின் பல்வேறு சிறைகளில் பல்லாண்டு காலமாக அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் விசாரணைகளின்றியும் விடுதலையின்றியு மிருக்கின்ற அவர்களதும் அவர்களது குடும்பத்தினரதும் நெருக்கடிகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். Read more