சர்வதேச அன்னையர் தினம்-
சர்வதேச அன்னையர் தினம் வலி மேற்கு பிரதேச சபையின் அனுசரணையோடு சித்தன்கேணி அறிவொளி சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுச் சங்கத்தால் அனுஸ்டிக்கப்பட்டது இந்நிகழ்வு 31.12.2013 நேற்றுமாலை 3.00 மணியளவில் சித்தன்கேணி அறிவொளி சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் சித்தன்கேணி அறிவொளி சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுச்சங்க தலைவர் திருமதி கி.கம்சமாலினி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஜங்கரன் பிரதம விருந்தினராகவும், வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான திரு சபாநாயகம். திரு இராஜதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர் இந் நிகழ்வில் அன்னையின் சிறப்பு பற்றி சிறார்கள் பலர் உரையாற்றினார்கள் இதனைத் தொடர்ந்து வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஜங்கரன் அவர்களால் அன்னையர்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டு அன்னையர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சர்வதேச எயிற்ஸ் தினம்-
சர்வதேச எயிற்ஸ் தினம் வலி மேற்கு பிரதேச சபையின் அனுசரணையோடு அராலி ஊரத்தி அம்பாள் கடற்தொழிலாளாளர்; சங்கத்தால் அனுஸ்டிக்கப்பட்டது இந்நிகழ்வு 31.12.2013 நேற்றுமாலை 5.00 மணியளவில் அராலி ஊரத்தி அம்பாள் கடற்தொழிலாளாளர்; சங்க மண்டபத்தில் அராலி செந்தழிழ் சனசமுக நிலைய செயலாளர் செல்வி செ.மல்லிகா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஜங்கரன் பிரதம விருந்தினராகவும், வட்டுக்கோட்டை கிராமிய வைத்தியசாலை மருத்துவமாது திருமதி மனோன்மணி; சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டிருந்தனர்