ஜனாதிபதி வடக்கு முதலமைச்சர் சந்திப்பு-

v&mv&mmஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துடன் வடமாகாண சபையின் எதிர்கால நிர்வாக செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சரவை செயலாளர் சுமித் அபேசிங், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர ஆகியோரும் உடனிருந்ததாக கூறப்படுகிறது.

காணாமல் போனோர் விவகார விசாரணைக்குழு ஏமாற்று நாடகம்: அனந்தி-

anaகாணமாற்போன உறவுகள் தொடர்பாக அரசு விசாரணைக்குழு அமைக்கப்படுமென்று சர்வதேசத்திற்கு கூறிவருவது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை மாநாடு இடம்பெறவுள்ளது. இதற்கு இலங்கை அரசு விசாரணைக்குழு அமைப்பதாக கூறுகின்றது. இது கண்துடைப்பு வேலையாகவுள்ளது. இவ்வாறான பல விசாரணைக்குழுக்கள் முன்னர் அமைக்கப்பட்டு இதுவரையில் எதுவித தீர்வுகளும் வழங்கப்படவில்லை. ஆகையால் சர்வதேசம் இதில் நேரடியாகத் தலையிட வேண்டும். அதன்மூலமும் மக்கள் அச்சமின்றி சாட்சியமளிக்க வேண்டும். நான் ராதிகாவை நட்பு ரீதியாக சந்தித்தேன். இலங்கையில் நடந்தவற்றை கனடாவில் அவர் எடுத்துரைப்பார் என நம்புகின்றேன் என வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.