Header image alt text

சங்கானை மத்தியஸ்தர் சபை தொடர்பில் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்-

san3யாழ். சங்கானை மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் தொடர்பாக வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில்,
எமது பிரதேசத்தில் செயற்பட்டுவரும் மத்தியஸ்தர் சபையானது மிக சிறப்பான முறையில் பிரதேச மக்களது பிணக்குகளை தீர்த்து இயலுமான வரையில் சமாதானத்துடன் மக்கள் வாழ வழி அமைத்து வருகின்றது. ஆயினும் அண்மைக்காலமாக இச்சபை இயங்கும் பாடசாலையானது பொருத்தமற்ற ஒன்றாக உள்ளதாக பிரதேசவாசிகளால் எனக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்படி மத்தியஸ்தர் சபை குறித்த பாடசாலையின் மேற்தளத்தில் இயங்குவதால் ஊனமுற்றவர்கள், வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இவ் மத்தியஸ்தர்கள் சபையின் செயற்பாடுகளில் கலந்துகொள்வது சிரமமாக அமையும் Read more

சுழிபுரம் விக்டோறியா கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டம்-

Victoria_College_Chulipuramயாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் மாணவர்களை ஆறாம் தரத்தில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிராக இன்று மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தியுள்ளனர். இதுபற்றி தெரியவருவதாவது, யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லுரியானது வலிமேற்கு பிரதேசத்தில் வளங்கள் நிறைந்த பிரபல்யமான பாடசாலையாகும். அத்துடன் இப்பாடசாலையினைச் சூழப் பல்வேறு ஊட்டப்பாடசாலைகள் காணப்படுகின்றன. இருப்பினும் இவ்வருடம் இப்பாடசாலையில் தரம் 6க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு அண்மையில் வெளியான புலைமைப்பரிசில் பரீட்சையின் புள்ளியின் அடிப்படையிலே தெரிவு செய்யப்படுகின்றது. எனினும் அப்புள்ளி அடிப்படையில் மாணவர்களை தெரிவு செய்யம்போது குறைவான புள்ளிகளைப்பெற்ற மாணவர்களை அனுமதிக்க அதிபர் மறுத்துவிட்டார். Read more

மன்னார் மனித புதைகுழியில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு-

unnamed7unnamed4மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இதுவரை 11 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளநிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்றுகாலை முதல் குறித்த பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்பட்டது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரெட்ண ஆகியோர் முன்னிலையில் இன்றுகாலை 8 மணிமுதல் பிற்பகல் 2.15 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டு மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. ஏற்கனவே 11 மனித எழும்புக்கூடுகள் முழுமையாகவும் சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று மேலும் 4 மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேவேளை சில தடையப்பொருட்களும் குறித்த புதைகுழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Read more

வலி மேற்கில் 100 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பு கொடை-

vயாழ். வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஜங்கரன் அவர்களால் வலிமேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட 100 பாடசாலை மாணவர்கட்கு கற்றல் ஊக்குவிப்பு கொடை 2014 ஜனவரிமுதல் வழங்கப்படவுள்ளது. இவ்விடயத்தில் போரால் பாதிக்கப்பட்ட மற்றும் தாய் தந்தையரை இழந்த மாணவர்கள் முன்னுரிமைப்படுத்தப்பட உள்ளதாக வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஜங்கரன் கூறியுள்ளார். மேற்படி மாணவர்கள் கற்றல் ஊக்குவிப்பு கொடை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் எதிர்வரும் 15.01.2014 முதல் வலிமேற்கு பிரதேச சபை தலைமைக் காரியாலயத்தில் தம்மிடம் நேரடியாக பெற்றுக்கொள்ளுமாறும் திருமதி. நா.ஜங்கரன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை யாழ். வட்டுக்கிழக்கு சித்;தங்கேணிப் பகுதியில் 40 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாதிருந்த அந்திரான் ஒழுங்கை புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஜங்கரன் அவர்களைத் தொடர்பு கொண்டபோது மக்களது தேவைகளை அடிப்படையாகக் கொண்டு மேலும் பல வேலைத்திட்டங்கள் வெகுவிரைவில் வலி மேற்கு பிரதேசத்தில் இடம்பெறவுள்ளன என்று கூறியுள்ளார்.

வலி மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகள் புனரமைப்பு-

Valikamam_West_Divisional_Councilயாழ். வலி மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பல பகுதிகளில் மக்களின் கோரிக்கைக்காகவும், மக்களின் தேவைகள் அடிப்படையிலும் மிக நீண்டகாலம் கைவிடப்பட்டிருந்த பல வீதிகள் வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி.நா.ஜங்கரன் அவர்களின் ஏற்பாட்டின்கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி மூளாய் பிள்ளையார் கோவில் அருகாமையிலுள்ள மூளாய் டச்சு மேற்கு ஒழுங்கை, சுழிபுரம் நெல்லியான் வீதி, சுழிபுரம் பெரிய தம்பிரான் வீதி, சுழிபுரம் கல்விளான் வீதி, சுழிபுரம் காட்டுப்புலம் திருவடிநிலை இணைப்பு வீதி, மழுவை சிவன் கோவில் இணைப்பு வீதி ஆகியன புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் கீழ் சங்கானை பாரதி வீதி மற்றும் வெள்ளவாய்க்கால் வீதி புனரமைப்பு இடம்பெறுகின்றன. அத்துடன் சுழிபுரம் காட்டுப்புலம் திருவடிநிலை வீதியில் தற்போது மீள்குடியமர்ந்த மக்கள் இலகுவாக போக்குவரத்து செய்வதற்கு ஏற்றவகையிலும் வெள்ளப் பாதிப்பிற்கு உட்படாத வகையிலும் இரண்டு பெட்டி மதகுகளின் நிர்மான வேலைகளும் நிறைவடைந்துள்ளன. அத்துடன் வலி மேற்கு பிரதேச சபையின் நிதியைக் கொண்டு சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாசாலை வீதி மற்றும் அராலி நொச்சியம்பதி வீதி என்பவற்றின் மதகு வேலைகளும் நிறைவடைந்துள்ளன,

கட்சிச் செயலர்கள் தேர்தல்கள் ஆணையாளர் சந்திப்பு-

unnamed3சகல கட்சிகளினதும் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் இடையே இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் வாக்காளர் இடாப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் கட்சிகளின் செயலாளர்களுகளுடன் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளை பதிவுசெய்வது தொடர்பாகவும் இன்று கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சொத்துகள், பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை இதுவரை சமர்ப்பிக்காத பிரதிநிதிகள் குறித்தும் கட்சி செயலாளர்களுடன் தேர்தல் ஆணையாளர் கலந்துரையாடியதாக தெரியவருகிறது.

கனேடிய எம்.பி. ராதிகா முல்லைத்தீவிற்கு விஜயம்-

rathiகனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை நேற்று மேற்கொண்டிருந்தார். இறுதி யுத்தம் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டதுடன், அங்கு மீள்குடியேறியுள்ள மக்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, தாங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பிலும் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

அகதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி-

42013ம் ஆண்டில் நாடு திரும்பிய அகதிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்திருப்பதாக ஐக்கி நாடுகளின் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு மீண்டும் திரும்பும் அகதிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை உதவி வழங்கி வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு மொத்தமாக 718 அகதிகள் இலங்கை திரும்பியுள்ளனர். அவர்களுள் ஏழுபேர் மலேசியா மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகளில் இருந்தும் ஏனைய அனைவரும் தென்னிந்தியாவில் இருந்தும் நாடு திரும்பியவர்களாவர். எவ்வாறாயினும் இந்த எண்ணிக்கை கடந்த 2012, 2011ம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது சடுதியாக குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 2011ம் ஆண்டு ஆயிரத்து 728 பேரும், 2012ம் ஆண்டு ஆயிரத்து 480பேரும் சுயவிருப்பத்துடன் இலங்கை திரும்பினர். இதற்கிடையில் 2013ம் ஆண்டு ஜுன் மாதம் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்படி இலங்கையைச் சேர்ந்த ஒருலட்சத்து 24 ஆயிரத்து 436பேர் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வசிப்பதாக தெரியவருகிறது.

யாழில் வாள்வெட்டு: அறுவர் படுகாயம்-

messerமோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினரின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த ஆறுபேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர யாழ். வசாவிளான் கோணாவளைப் பகுதியில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வசவிளான் பகுதியிலுள்ள பிரார்த்தனை கூடத்திற்கு முன்னால் நின்று கதைத்துக்கொண்டிருந்த இளைஞர்கள்மீதே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வசாவிளான் செல்வநாயகபுரம் பகுதியினைச் சேர்ந்த திலப் துஷாந்தன் (18), வள்ளிபுரம் ரூபவதனன் (28) குழந்தைவேல் கலியுகவரதன் (45), முத்துலிங்கம் ஜெகநாதன் (30), துஷாந்தன் குணசீலன் (18), திலீப் ஜெயரூபன் (21) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

மீண்டும் பிரதமராகும் எண்ணம் இல்லை – மன்மோகன் சிங்-

manmohanஐக்கிய முற்போக்கு கூட்டணி அதிகாரத்தை கைப்பற்றினால், மீண்டும் பிரதமராகும் எண்ணம் தமக்கு இல்லை என கலாநிதி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே பிரதமர் இவ்வியடத்தை கூறியதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன. மேலும் இந்திய பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு உள்ளதாக குறிப்பிட்ட மன்மோகன் சிங், நாட்டை இளைய தலைமுறையினர் வழிநடத்துவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக கலாநிதி மன்மோகன் சிங் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளதுடன், கடந்த 9 ஆண்டுகளில் 3 முறை மாத்திரமே அவர் செய்தியாளர்களை சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் கைது

mannar_0மன்னார் கடற்பரப்பில் வைத்து 32 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தனுஷ்கோடி பகுயைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆறு படகுகளும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதான அவர்கள் கற்பிட்டி பொலீசாரிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடந்த வாரம் 30 தமிழக மீனவர்கள் இரு வௌ;வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.