சங்கானை மத்தியஸ்தர் சபை தொடர்பில் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்-

san3யாழ். சங்கானை மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் தொடர்பாக வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில்,
எமது பிரதேசத்தில் செயற்பட்டுவரும் மத்தியஸ்தர் சபையானது மிக சிறப்பான முறையில் பிரதேச மக்களது பிணக்குகளை தீர்த்து இயலுமான வரையில் சமாதானத்துடன் மக்கள் வாழ வழி அமைத்து வருகின்றது. ஆயினும் அண்மைக்காலமாக இச்சபை இயங்கும் பாடசாலையானது பொருத்தமற்ற ஒன்றாக உள்ளதாக பிரதேசவாசிகளால் எனக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்படி மத்தியஸ்தர் சபை குறித்த பாடசாலையின் மேற்தளத்தில் இயங்குவதால் ஊனமுற்றவர்கள், வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இவ் மத்தியஸ்தர்கள் சபையின் செயற்பாடுகளில் கலந்துகொள்வது சிரமமாக அமையும்

san4san1san2அதேவேளை ஆபத்தானதாகவும் அமைந்திருப்பது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இவ் விடயத்தை தாங்கள் அறிந்து கொள்ளும் வகையில் நிழற் படங்களையும் இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். மேற்படி விடயம் தொடர்பில் தங்களது ஆக்கபூர்வமான பதிலை எதிர்பார்க்கின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் பிரதிகள் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், யாழ் அரச அதிபர், சங்கானை பிரதேச செயலர், சங்கானை மத்தியஸ்த சபையின் தவிசாளர் ஆகியோர்க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.