சுழிபுரம் விக்டோறியா கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டம்-

Victoria_College_Chulipuramயாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் மாணவர்களை ஆறாம் தரத்தில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிராக இன்று மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தியுள்ளனர். இதுபற்றி தெரியவருவதாவது, யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லுரியானது வலிமேற்கு பிரதேசத்தில் வளங்கள் நிறைந்த பிரபல்யமான பாடசாலையாகும். அத்துடன் இப்பாடசாலையினைச் சூழப் பல்வேறு ஊட்டப்பாடசாலைகள் காணப்படுகின்றன. இருப்பினும் இவ்வருடம் இப்பாடசாலையில் தரம் 6க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு அண்மையில் வெளியான புலைமைப்பரிசில் பரீட்சையின் புள்ளியின் அடிப்படையிலே தெரிவு செய்யப்படுகின்றது. எனினும் அப்புள்ளி அடிப்படையில் மாணவர்களை தெரிவு செய்யம்போது குறைவான புள்ளிகளைப்பெற்ற மாணவர்களை அனுமதிக்க அதிபர் மறுத்துவிட்டார். இம் மாணவர்களில் பலர் சுழிபுரம் பெரியபுலவு, கல்விளான், வறுத்தோலை, திக்கரை ஆகிய அயற்கிராம மாணவர்கள் ஆவார், இந்நிலையில் இன்றுகாலை (03.01.2014) அனுமதிபெறும் பொருட்டு மாணவர்களுடன் பெற்றோர் பாடசாலைக்கு சென்ற சமயம் அதிபர் கல்விப் பணிப்பாளரின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் எதிர்வரும் 06.01.2014 அன்று பெற்றோரை மட்டும் வருமாறும் பணித்தார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கல்லூரியின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன, பாராளுமன்ற உறுப்பினர், ஈ.சரவணபவன், மற்றும் மாகாணசப உறுப்பிப்பினர் பா. கஜதீபன் ஆகியோருக்கு தொலைபேசிமூலம் அழைப்பினை மேற்கொண்டு சம்பவத்தினை விளக்கியுள்ளனர் இந்நிலையில் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நா. ஐங்கரன், மாகாணசப உறுப்பிப்பினர் கஜதீபன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மக்களுடனும் அதிபருடனும் பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ .ஈ சரவணபவன், வடமாகாண கல்வி அமைச்சருக்கு உடனடியாக நிலைமையினை தெரியப்படுத்தியதை தொடர்ந்து வட மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கு அமைய அதிபர் அனுமதி புறக்கணிக்கப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.