Header image alt text

கேதீச்சரம் மனித புதைகுழியில் இருந்து 26 எலும்புக்கூடுகள் மீட்பு-

gமன்னார், திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியிலிருந்து சுமார் 70 மீற்றர் தொலைவில் உள்ள மனித புதைகுழியிலிருந்து நேற்றுவரை 26 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாத்திரம் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலிருந்து டிசம்பர் 20ஆம் திகதியில் இருந்து கடந்த 4ஆம் திகதி வரைக்கும் மனித எலும்பு கூடுகள் 18உம், மனித எச்சங்களும் மீட்கப்பட்டன. இந்நிலையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னத்தின் உத்தரவிற்கமைய சட்ட வைத்திய நிபுணர் டி.எல் .வைத்திய ரெட்ன ஆகியோர் முன்னிலையில் மனித புதைகுழி தோண்டும் நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது புதிதாக 8 மனித எழும்புக்கூடுகள் நேற்று மீட்கப்பட்டன.

யாழ்ப்பாண கல்லுரியின் புதிய அதிபருக்கு வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் வாழ்த்து-

jaffna collegeவரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாண கல்லூரியின் 17ஆவது அதிபராக பொறுப்பேற்றுள்ள அருட்திரு கலாநிதி டேவிட் சதானந்தன் சொலமன் அவர்களை அகம்மிக மகிழ்ந்து பாராட்டுகின்றேன். இறைபணியினையும் கல்விப்பணியினையும் ஒருங்கே இணைத்துச் சென்று இனிவரும் காலங்கள் எமது தழிழ் சழூகத்திற்கு இனியவையாக மாற்றமுற நற்றமிழ் மாணவர் சமூகத்தை நற்பண்புடன் கட்டிவளர்த்து காலத்தின் பணியதனை கண்ணியமாய் நிறைவேற்றுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்த்துகின்றேன், வணங்குகின்றேன். என்றும் மக்கள் பணியில்,
திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன், தவிசாளர் – வலி மேற்கு பிரதேச சபை

ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு புதிய நீதிமன்ற கட்டிடம்-

courtஇதுவரை யாழ். ஊர்காவற்றுறை நீதிமன்றம் தனியார் வீடு ஒன்றில் இயங்கி வந்தது தற்போது ஊர்காவற்றுறை இறங்குதுறைக்கு அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் மிக பிரமாண்டமான கட்டிடம் வசதி வாய்ப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டிட திறப்புவிழா எதிர்வரும் 09.01.2014 அன்று இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் நீதி அமைச்சர், நீதி அமைச்சின் செயலர், பிரதம நீதியரசர், சட்டமாஅதிபர் உட்பட பல அதிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். ஆயினும் முன்னாள் நீதியரசரும், வடமாகாண முதலமைச்சருமான சீ.வீ.விக்னேஸ்வரனுக்கோ, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

வலிமேற்கு பிரதேச மக்களை விழிப்புடன் இருக்குமாறு தவிசாளர் வேண்டுகோள்-

Valikamam_West_Divisional_Councilயாழ் மாவட்டத்தின் வலிகாமம் மற்றும் தீவகப்பகுதிகளில் இன்றையதினமும் இருள்சூழ்ந்த காலநிலை நிலவிவருகின்றது. இதன்படி வலிகாமம் மேற்கு பிரதேசத்தின் கரையோர பகுதிகளில் அசாதாரண காலநிலை காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கரையோரப்பகுதி மக்களை மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

புல்மோட்டையில் மினி சூறாவளி: வீடுகள் பல சேதம்-

untitledநாட்டில் நிலவுகின்ற தொடர்ச்சியான மழை மற்றும் அசாதாரண காலநிலை காரணமாக திருமலை மாவட்டத்தின் புல்மோட்டையில் மினி சூறாவளி நேற்றிரவு வீசியுள்ளது. இதனால் ஜின்னாபுரம் பகுதியில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. வீட்டின் கூரைகள் காற்றில் அள்ளுண்டதுடன் வீட்டினுள் இருந்த பெறுமதியான பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் கடும் மழை-

untitledதாழமுக்கம் காரணமாக வவுனியா மற்றும் புத்தளம் உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்துவருகின்றது. இன்றுகாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவிலான மழைவீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வவுனியாவில் 188 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. புத்தளத்தில் 68 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருகோணமலையில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

திருமலை மாணவர் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு-

five students trincoதிருகோணமலையில் 2006ஆம் ஆண்டில் ஜந்து மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 13பேரும் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜீலை மாதம் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது நீதவான் ரீ. சரவணராஜா வழக்கினை ஒத்திவைத்துள்ளார்.

ஆவா குழுவின் பின்னணியில் இராணுவம்- எம்.கே.சிவாஜிலிங்கம்-

mk sivajilingamயாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ‘ஆவா’ குழுவின் பின்னணியில் இராணுவம் செயற்படுகிறதென தாம் சந்தேகிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் இன்று தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த 9பேர் நேற்று கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே சிவாஜிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பலர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு இன்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆவா குழுவினருக்கு கைக்குண்டுகள் எவ்வாறு கிடைத்தன என பல கேள்விகள் எழுகின்றன. சாதாரண மக்கள் கைக்குண்டு வைத்திருப்பது என்பது சாத்தியப்பாடானது அல்ல. அந்த வகையில், இந்த பாதாளக் குழுக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது என்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், இக் கைக்குண்டுகள் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் நீதியான விசாரணை அவசியம் என அவர் கூறியுள்ளார்.

யாழில் ‘ஆவா’ கொள்ளைக் கோஷ்டியினர் கைது-

ava group 01யாழில் கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த கொள்ளைக் கும்பல் ஒன்று கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், உட்பட உயிராபத்து ஏற்படுத்த கூடிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன இது குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிறீநிக சஞ்ஜீவ ஜெயக்கொடி தெரிவிக்கையில்,
கடந்தவாரம் கோண்டாவில் பகுதியிலுள்ள வீடொன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யபட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணைகளின் மூலமே இக்குழுவை நாம் கைது செய்துள்ளோம். சந்தேகநபர் தந்த வாக்குமூலத்தினை அடுத்து எனதும் கோப்பாய் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.எஸ். ஏக்கநாயக்கவினதும் தலைமையிலான பொலிஸ் குழு ஏனையவர்களை கைதுசெய்தது. Read more

வடக்கு முதல்வரின் பெயரில் போலி நியமனக் கடிதங்கள்-

npc2_CIவடமாகாண சபையின் பெயரால் மக்கள் தொடர்பாளர் பதவிக்கென போலியாகத் தயாரிக்கப்பட்ட நியமனக் கடிதங்கள் நேற்று யாழ்; தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் வைத்து 15ற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவை முதலமைச்சரால் வழங்கப்படவில்லை என்றும் அவ்வாறான நியமனம் வழங்கும் நிகழ்வு வடமாகாண சபையால் நடத்தப்படவில்லை என்றும் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மன்மதராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் இணைப்புச் செயலாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திய செ.தனுபன் என்பவரே இந்த மோசடியை மேற்கொண்டுள்ளார். குறித்த 15 பேருக்கும் வவுனியாவில் வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமனம் வழங்குவார் என முன்னர் மோசடி நபர் தெரியப்படுத்தியுள்ளார். ஆனாலும் அது இடமாற்றம் செய்யப்பட்டு நேற்றுப் பிற்பகல் 3 மணிக்குத் தெல்லிப்பழையில் நடைபெறும் என அவர் பின்னர் கூறியுள்ளார். நேற்றுப் பிற்பகல் அங்கு சென்ற 15ற்கும் மேற்பட்டவர்களுக்கு குறித்த நபர் வேறு சிலருடன் இணைந்து கடிதங்களை வழங்கியுள்ளார். Read more