கல்விளானில் மாலைநேர பஜனைப் பாடசாலை ஆரம்பித்து வைப்பு-

unnamed (8)யாழ். வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி அவர்களது வலி மேற்கு பிரதேசத்தில் 100 மாலைநேர பஜனைப் பாடசாலைகளை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் இரண்டாவது பாடசாலை சுழிபுரம் கல்விளான் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நேற்றுமாலை (07.01.2014) 5மணியளவில் சுழிபுரம் கல்விளான் காந்திஜி சனசமூகநிலையத்தில் காந்திஜி சனசமூகநிலைய தலைவர் ப.அன்னலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக சர்வதேச இந்து குருமார் ஒன்றியத் தலைவர் சபா வாசுதேவ குருக்கள், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ..சரவணபவன், வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

unnamed (5)unnamed (6)unnamed (13)unnamedஇந்நிகழ்வில் உரையாற்;றிய சுழிபுரம் கல்விளான் காந்திஜி சனசமூகநிலைய தலைவர் ப.அன்னலிங்கம் அவர்கள், மேற்படி வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி அவர்களது 100 மாலைநேர பஜனை பாடசாலைத் திட்டம் சமுதாயத்திற்கு மிக முக்கியமான ஒன்று என குறிப்பிட்டார் இச் செயற்பாட்டை முன் உதாரணமா கொண்டு ஏனைய பிரதேச சபைகளும் முன்னெடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்,

தொடர்ந்து ஆசியுரை வழங்கிய சர்வதேச இந்து குருமார் ஒன்றிய தலைவர் சபா வாசுதேவ குருக்கள், வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி அவர்களது 100 மாலைநேர பஜனை பாடசாலைத் திட்டத்தை வரவேற்பதாகவும் இன்றைய சமுதாயம் சரியான முறையில் வளப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு சமய வாழ்வே மனிதனை பூரணப்படுத்தும் என்பதனையும் வலியுறுத்தினார்,

தொடர்ந்து வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தனதுரையில், தனது இப் பணியானது வலி மேற்கு பிரதேசம் முழுவதும் தொடரும் எனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் உரையாற்றும்போது, மாணவர்களை சிறு வயது முதலாக நல்வழிப்படுத்துவது சமூகத்திலுள்ள அனைவரதும் பெறுப்பாகும். மிக அண்மையில் இப் பகுதி மாணவர்கள் பாடசாலை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உடனடியாக கல்வி அமைச்சருடன் தொடர்புகொண்டு அனுமதிக்கு நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

மாணவர்கள் குறைந்த புள்ளிகள் பெறுவதற்கு அவர்கள் கற்ற பாடசாலைகளே காரணம் கூறவேண்டும். இனிவரும் காலங்களில் இவ்வாறான நிலைக்கு இடமளிக்காது எமது மாணவர்களை நாமே முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதோடு வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி அவர்களது 100 மாலைநேர பஜனை பாடசாலைதிட்டத்தை வரவேற்பதுடன், இச் செயற்பாடுகள் தொடர ஒத்துழைப்பதாக குறிப்பிட்டார்,

இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட மாணவர்கட்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது