‘நாம் எப்போதும் சமாதானத்துக்கு உதவுவோம். இரு நாட்டுக் கொள்கைக்கு நாம் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள். பொதுமக்களின் நன்மைக்காக சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்’ என்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அந்நாட்டு ஜனாதிபதி சிமொன் பெரஸூக்கு தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது ‘இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ளும் நோக்கில் இரு நாடுகளை உருவாக்குக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உத்தரவுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என்று இஸ்ரேல் ஜனாதிபதிக்கு உறுதியளித்து உரையாற்றும் போதே இலங்கை ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட இஸ்ரேல் ஜனாதிபதி, ‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இலங்கை அடைந்துள்ள வளர்ச்சி வீதமானது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் மூன்று தசாப்த கால யுத்தத்துக்குப் பின்னரான இந்த வளர்ச்சி மிகவும் அதிசயிக்கத்தக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார்