இறுதியுத்தம் தொடர்பான இரகசியம் – டியூ குணசேகர-

du kunasekaraஇறுதி யுத்தத்தின் இறுதி தருணத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பான இரகசியங்களை சிரேஸ்ட அமைச்சர் டியூ குணசேகர வெளியிட்டுள்ளார். யுத்தத்தின் இறுதி தருணத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதனை நிறுத்துவதற்கு முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரத்கம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் யுத்தம் நிறைவடைந்தது, அந்த இறுதி 5 தினங்களில் என்ன நடந்து என்று எனக்கு நன்றாக தெரியும், அமெரிக்க ஜனாதிபதி, யுத்தத்தை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு தொலைபேசியில் தெரிவித்தார். இல்லையேர் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை புலிகளை காப்பாற்றுவோம் எனவும் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர், கனடா பிரதமர், இங்கிலாந்து பிரதமர் போன்றோர் யுத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தினர். எனக்கு நன்றாக தெரியும், அன்று அவர்கள் சொன்னதுபோல் நாங்கள் செயற்பட்டிருந்தால் அவர்கள் வந்து பிரபாகரனை மீட்டுக்கொண்டு சென்றிருப்பார்கள். அவ்வாறு செய்யாததன் காரணத்தினால் தான் இன்று நம்மை ஜெனிவா கொண்டுச் செல்ல அவர்கள் முனைகின்றனர் என சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க துணை ராஜாங்க செயலரின் விஜயம் தாமதம்-

Pisvalஅமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா டெசாய் பிஷ்வாலின் இலங்கை விஜயம் தாமதமடையும் என தெரிவிக்கப்படுகிறது. பிஷ்வால் இம்மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வாரென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறுவதற்கு முன்னதாக அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளரை இலங்கைக்கு அனுப்பி அதன்பின்னர் இந்தியாவுடன் இலங்கை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நிலவிவரும் ராஜதந்திர முறுகல் நிலைமையானது பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளரின் இலங்கை, இந்தியப் விஜயங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கபேயின் கண்காணிப்பு பணிகள் ஆரம்பம்-

நடைபெறவுள்ள மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிப்பதற்காக ஜனவரி 16ம் திகதிமுதல் கபே இயக்கத்தின் தேசிய தொடர்பாடல் மத்திய நிலையம் செயற்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். வேட்புமனு தயாரிப்பு காலம், வேட்புமனு தினம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க கபே இயக்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் வன்முறை, தேர்தல் சட்ட மீறல், மக்களின் வாக்குரிமை பாதுகாப்பு, அநாவசிய பொது சொத்து பாவனை, லஞ்சம் மற்றும் தேர்தல் தவறுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கபே இயக்கம் தீர்மானித்துள்ளது. இல. 100ஃ19 வெலிகடவத்த, ராஜகிரிய எனும் இடத்தில் இருந்து கபே இயக்கத்தின் மத்திய நிலையம் இயங்கவுள்ளது. 0114341514, 0114341524 என்ற தொலைபேசி மற்றும் 0112 866224 என்ற தொலைநகல், உயககந2008ளூபஅயடை.உழஅ என்ற மின்னஞ்சல் ஊடாக கபே இயக்கத்திற்கு தகவல் வழங்க முடியும் என கபே இயக்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏப்ரலில் யாழ் தேவி யாழ்ப்பாணத்திற்கு வரும்-பிரதமர்-

yaal deviயாழ்ப்பாணத்திற்கு யாழ்தேவி எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரும் என பிரதமர் டி.எம் ஜயரட்ன தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ். துர்க்கா மணிமண்டபத்தில் முத்திரை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து யாழ்தேவி யாழ்ப்பாணத்திற்கு சேவையினை மேற்கொள்ளவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 30 வருடகால யுத்தம் 2009ஆம் ஆண்டுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பாடசாலைகள், வீதிகள், கோயில்கள் மற்றும் வைத்தியசாலைகள் என்பனவும் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன என பிரதமர் டி.எம் ஜயரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் குறித்து வெளிநாடுகளுக்கு தெளிவில்லை-மஹானாமஹேவா-

நாட்டின் மனித உரிமைகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு உரிய முறையில் தெளிவுபடுத்தப்படுவதில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீப மஹானாமஹேவா தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் இடம்பெறும் சிறிய விடயமொன்றும் பெரியளவாக மாற்றப்பட்டே சர்வதேச சமூகத்திற்கு செல்கின்றது. அவற்றின் அடிப்படையிலேயே பழ.நெடுமாறன், ருத்ரகுமாரன் போன்றோர் ஊடகங்களின் ஊடாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இவ்விடயங்கள் தொடர்பில் சரியான தெளிவுபடுத்தல்களை அரசாங்கத் தரப்பு மேற்கொள்வதில்லை. அத்துடன் பொறுப்பு வாய்ந்தவர்களும் சர்வதேச ரீதியில் நிலவும் பிழையான கருதுக்களை மாற்றியமைக்க முனைவதும் இல்லை. மேலும் சாட்சியாளர்கள், பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டத்தை அமுல்படுத்தல், தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்துதல் போன்ற விடயங்களை அமுல்படுத்த வேண்டும் என ஆணையாளர் பிரதீப் மஹானாமஹேவா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கம் கடத்த முயன்ற பெண் கைது-

சட்டவிரோதமாக ஒரு கிலோகிராம் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டுசெல்வதற்கு முயற்சித்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட அந்தப் பெண் மும்பை செல்வதற்கு தயாராகவிருந்ததாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார். அவரிடம் இருந்த தங்கத்தின் பெறுமதி 53 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவரே தங்க நகைகள் கடத்த முயன்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவினர் முன்னெடுத்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி மேலும் கூறியுள்ளார்.

புராதன பொருட்களுக்கு சேதம் விளைவித்தவர்கள் கைது-

anuradapuramஅனுராதபுர ராஜதானி வரலாற்று காலப்பகுதியியைச் சேர்ந்த புராதன பொருட்களுக்கு சேதம் விளைவித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராந்துருகோட்டேயின் வனப்பிராந்தியத்தில் உள்ள டிகன்கல பாறையில் இருந்த புராதன பொருட்களேயே இவர்கள் சேதப்படுத்தியுள்ளதாக பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். பதுளை மாவட்டத்தில் புராதன பொருட்களை பாதுகாக்கும் பொலீஸ் விசேட பிரிவினராலேயே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை-

இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் முகமான பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் என இந்திய மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுடன், இரு நாட்டு மீனவ சமூகத்தவரின் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொள்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து நிரந்தர தீர்வொன்றை காணுவது குறித்து மத்திய அரசாங்கம் உறுதியாகவுள்ளதாகவும், அத்துடன் இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மீனவர்கள் இலங்கை தரப்பினரால் தாக்கப்படுவது குறித்தும் ஆராயப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேல் மற்றும் தெற்கு மாகாணங்கள் கலைப்பு-

மேல் மற்றும் தென் மாகாண சபைகள் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான கட்சிகள் தேர்தலுக்கு முகங்கொடுக்க தயார் என தெரிவித்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐ.தே.கட்சி மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு முகங்கொடுக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளன. இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளமையை உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்த பின்னர், அவர் ஒருவார காலப்பகுதிக்கு இந்த மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்களை கோரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீன போர்க் கப்பல்கள் திருமலை துறைமுகத்தில் தரிப்பு-

சீனாவின் இரண்டு போர்க் கப்பல்கள் இன்று திருகோணமலை சீனக்குடா அஷ்ரப் இறங்கு துறைமுகத்தினை வந்தடைந்துள்ளன. சீனாவுக்கும் இலங்கைக்குமான நற்புறவினை மேம்படுத்துவதினை நோக்கமாகக் கொண்டே இக்கப்ல்கள் இரண்டும் அங்கு சென்றுள்ளன. இவை எதிர்வரும் 15ஆம் திகதிவரை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கவுள்ளன. ஜிம்ஜம்பா (999) என்னும் கப்பல் 210 மீற்றர் நீளம் கொண்டதாகும். மற்றையது கென்சு (572) என்னும் கப்பல் 134.1 மீற்றர் நீளம் கொண்டது. இக் கப்பல்களில் 680 உதவியாளர்கள் உள்ளனர்.

இலங்கை துணைத் தூதர்-தமிழக மீனவர்கள் சந்திப்பு-

இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் சபருல்லா கானுடன தமிழக மீனவப் பிரதிநிதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் 6 மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் கைது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டடுள்ளது.