தமிழ் சீஎன்என் தடைசெய்யப்பட்டமைக்கு கண்டனம்-
தமிழ் சீஎன்என் இலங்கை மக்கள் பார்வையிட முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் மிக வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன் இன்றைய நவீன ஜனநாயகத்தில் நான்கு தூண்களில் ஒன்றாக ஊடகத்துறை உள்ள நிலையில் இவ்வாறு செயற்படுவது ஊடகத்துறையை குழிதோண்டி புதைக்கும் ஓர் செயலாகவே கருத முடியும். இவ்வாறான செயல் இந்த நாட்டில் காணப்படுவதாக கூறப்பட்டு வரும் ஜனநாயக தன்மையில் மக்கள் கொண்டுள்ள இம்மியளவு நம்பிக்கையையும் சிதைவடையச் செய்யும் என்றே கருதமுடியும். மிக நெருக்கடியான கால கட்டங்களில் பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளை வெளியிட்ட அதேவேளை தழிழ் மக்களின் உணர்வுகளையும் உரிய முறையில் வெளிப்படுத்தி வந்தமை யாபேரும் அறிந்த உன்மை. இந்த வகையில் தொழிற்பட்டு வந்த இணையத்தளம் தடுக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் திருமதி.நா.ஐங்கரன், தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை.
யாழ். பல்கலையில் பட்டம் பெறும் அனைவரையும் பாராட்டி வாழ்த்து-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 29 வது பட்டமளிப்பு நிகழ்வில் பட்டம் பெற்றுக் கொள்ளும் அனைவரையும் மனதார பாராட்டி வாழ்த்துவதோடு இன்று பட்டம் பெறும் எம் இனிய உறவுகள் கடந்த காலங்களில் பல துன்பங்களையும் துயரங்களையும் சுமந்து போரின் வடுக்கள் இன்றும் மாறாது வாழ்ந்து வரும் எம் இனிய உறவுகள் பார் புகழ வாழ சேவையாற்ற முன்வரவேண்டும். திருமதி.நா.ஐங்கரன், தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை.
வலிமேற்கில் நான்காவது பஜனைப் பாடசாலை-
வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நா.ஐங்கரன் அவர்களது 100 பஜனை பாடசாலைத் திட்டத்தில் 4ஆவது பாடசாலை சங்கானை பகுதியிலுள்ள உருத்திரா வைரவர் கோவிலடியில் 14.01.2014 நாளை மாலை 3.30 மணியளவில் ஆரம்பிக்க உள்ளது. இந் நிகழ்வு ஆலய பூசகர் த.யோகராஜா தலைமையில் இடம்பெற உள்ளது. இன் நிகழ்வில் ஆசியுரையினை சர்வதேச இந்து குருமார் ஒன்றிய தலைவர் சபா வாசுதேவக் குருக்கள் நிகழ்த்த உள்ளார். இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபை. தவிசாளர், திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், அவர்களும் சிறப்பு விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபை. உறுப்பினர் த.சசிதரன் அவர்ளும் கலந்து கொள்ள உள்ளனர்
தைத்திருநாள் வாழ்த்து-
பிறக்கும் தைத்திருநாள் தழிழ் மக்களின் இன்னல்களை போக்கும் ஒரு மகத்தான நாளாக அமைய இறைவனை வேண்டுகின்றேன். தை பிறந்தால் வழிபிறக்கும் எனும் எம் ஆன்றோரின் வாக்கிற்கு அமைய இத் தைத்திருநாள் பல இன்னல்களையும் துன்பங்களையும் சுமந்து போரின் வடுக்கள் மாறாத எம் இனத்தவற்கு விடியலை தரும் நாளாக அமைய வேண்டும். இதேவேளை தமிழர்களாகிய நாம் எமது பண்பாட்டின் வழிநின்று இத் தை திருநாளை பெரியோர் முத்தோர் வழிகாட்டலலில் கொண்டாடுவதோடு புனிதமான இத்திருநாளை உலகம் போற்றும் எமது பண்பாட்டின் முதல் அடையாளமாக காட்டுவோம் திருமதி.நா.ஐங்கரன், தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை.