ரயகுலனின் நான் போகின்றேன் மேலே மேலே இறுவெட்டு வெளியீடு-
யாழ். இணுவையூர் குகானந்தனின் ஸ்வரலயம் கிரீயேசன்ஸ் மற்றும் வில்வாஸ் ஸ்போட்ஸ் ஆகியன இணைந்து வழங்கும் ‘ரயகுலனின் நான் போகின்றேன் மேலே மேலே’ இறுவெட்டு வெளியிட்டு விழா இன்றையதினம் இணுவில் ஸ்வரலயம் கலையகத்தில் இடம்பெற்றது. இவ் விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார். முதல் பிரதியினை திரு. தயாபரன் அவர்கள் வழங்க மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார் வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர் முத்துலிங்கம் நவலோகராஜா (லோகன்) செல்வம் மற்றும் கலைவிழி விளையாட்டுக்கழக அங்கத்தவர் சுகந்திரன் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்று இறுவெட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்கள்.