வலிமேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி வார இறுதி நாள் நிகழ்வுகள்-

unnamedகடந்த 30.12.2013இல் வலிமேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி வார இறுதி நாள் நிகழ்வுகள் வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர், திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில், வலிமேற்கு பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திருவாகரன், வட மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர், வட மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், வட மாகாண சபை உறுப்பினர் ஆனேல்ட் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந் நிகழ்வின் ஆரம்பத்தில் வழக்கம்பரை முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தில் நடைபெற்ற விசேட பூஜை நிகழ்வுகளை தொடர்ந்து மங்கள வாத்தியம் முழங்க வலிமேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள் பிரதேச வாசிகள் சகிதம் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர், இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபையின் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் ஆவணமாகிய வலி மேற்கின் வசந்தம் நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து வலிமேற்கு பிரதேச கலைஞர்கள் 25 பேர் தவிசாளரால் கௌரவிப்பு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் 25 வருடம் உள்ளுராட்சி சேவையில் ஈடுபட்ட உத்தியோகஸ்தர்களுக்கான கௌரவிப்பு விளையாட்டு நிகழ்வுகளுக்கான பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

unnamed (11)unnamed (10)unnamed (9)unnamed (8)unnamed (7)unnamed (6)unnamed (5)unnamed (4)unnamed (3)unnamed (2)unnamed (1)