Header image alt text

அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

imagesCA9O8Z5G

தை பிறந்தால் வழி பிறக்கும்  என்பது பழமொழி!

அரசாள்பவர் மனம் திறந்தால் எம் நிலைமாறும் என்பது புதுமொழி!

imagesCA19AWQQ

அரசுக்கு ஏற்றமாதிரியே குடிசன மதிப்பீடு-சுரேஷ் எம்.பி-

sureshஉண்மைகளை மூடிமறைத்து அரசாங்கத்திற்கு தேவையான விதத்திலேயே தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களத்தினால் குடிசன மதிப்பீடு வடக்கில் மேற்கொள்ளப்பட்டது. எனவே இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் சர்வதேச நிறுவனங்களை வெளியேற்றி சாட்சியமில்லாத யுத்தத்தை அரசாங்கமே நடத்தியது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். உண்மையில் யுத்தம் முடிந்தவுடன் மக்களை மீள்குடியேற்றி அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து அதன் பின்னர் தொகை மதிப்பு புள்ளி விபரத்தினை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் 4 வருடங்களுக்கு பின்னர் அவசர அவசரமாக கிராம அறிவுத்து அரசுக்கு தேவையான விதத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களில் உண்மை இல்லை. ஜெனிவாவை இலக்கு வைத்தும் சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்கத்திலேயே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவை-

yaal deviதலைமன்னார் பியர் மடுவீதி ரயில் போக்குவரத்துக்கான கட்டுமான வேலைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிணங்க எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இவ்வேலைகள் பூர்த்தியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 30 வருடங்களுக்கு முன் கொழும்பிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ரயில் சேவை வன்செயல் காரணமாக 1984ம் ஆண்டிலிருந்து இச் சேவை மதவாச்சியிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் இடை நிறுத்தப்பட்டது. அத்துடன் வன்செயல் காரணமாக இப்பகுதியிலுள்ள தண்டவாளங்கள், புகையிரத நிலையங்கள் என்பன சேதமாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இர்க்கோ கம்பனி மதவாச்சியிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் தண்டவாளங்களை, புகையிரத நிலையம் மற்றும் அதன் பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணியை முன்னெடுத்து வருகின்றது. Read more

வேட்புமனு தாக்கல் 17ம் திகதி அறிவிப்பு-

தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்தை எதிர்வரும் 16 அல்லது 17ம் திகதிகளில் வெளியிடவுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த இரு மாகாண சபைகளுக்கும் 2013ம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலே பயன்படுத்தப்படவுள்ளதாகவும் செயலகம் குறிப்பிட்டுள்ளது. தென் மற்றும் மேல் மாகாண சபைகளின் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் வர்த்தமானி அறவிப்பு இவ்வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. இதற்கிணங்க எதிர்வரும் 16 அல்லது 17ம் திகதிகளில் இந்த இரண்டு மாகாணங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிடவுள்ள உறுப்பினர்களின் தொகை, பெயர் குறித்து நியமனம் செய்ய வேண்டிய வேட்பாளர்கள் தொகை, சுயேச்சையாகக் கட்டுப்பணம் செலுத்துபவர்கள் பற்றிய விபரங்கள் இதன் போது வெளியிடப்படும். Read more

இந்திய – இலங்கை அமைச்சர்கள் நாளை பேச்சு-

sri &indiaமீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய – இலங்கை அமைச்சர்கள் டில்லியில் நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தியா சார்பில் மத்திய விவசாய அமைச்சர் சரத்பவாரும், இலங்கை சார்பில் மீன் வளத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். மன்னார் வளைகுடாவில் மீன் பிடிப்பதில் நிலவும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருவரும் கலந்துரையாடவுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சென்னையில் எதிர்வரும் 20ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்றுகாலை டில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இதேவேளை, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 20 இலங்கை மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more

அமெரிக்க விசேட தூதுவர் ரெப் மீது குற்றச்சாட்டு-

-யுத்த குற்றங்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் விசேட தூதுவர் ஸ்டிபன் ஜே ரெப், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து இலங்கை தொடர்பில் சர்வதேசத்திற்கு இரட்டை வேடம் போடுவதாக இலங்கை சட்டத்தரணிகள் அமைப்பின் ஒன்றியம் குற்றஞ்சாடடியுள்ளது. இந்நிலையில் நாட்டின் சகல தொழிற்சங்கங்களும் இணைந்து இவ்வாறான காட்டிச் கொடுப்புக்கு எதிராக செயற்பட வேண்டும் என ஒன்றியத்தின் இணைப்பாளர் ரவீந்து மனோஜ் தெரிவித்துள்ளார். ஸ்டிபன் ஜே ரெப் போன்றோர் இங்கு வந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்து, அன்று புலிகளால் குண்டுகளால் பெற்றுக்கொள்ள முடியாததை இன்று பேனையினால் பெற்றுக்கொள்ள முனைகின்றனர். இதற்கு ஒருபோதும் இடம்கொடுக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மும்மொழிகளில் தேசிய அடையாள அட்டை-

அடுத்த மாதம் முதல் மும்மொழிகளையும் உள்ளடக்கியதாக தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அச்சிடப்பட்டு வெளியிடப்படும் தேசிய அடையாள அட்டை மும்மொழிகளை உள்ளடக்கியதாக விநியோகிக்கப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ் சரத்குமார தெரிவித்துள்ளார். கணினிமயப்படுத்தப்பட்ட புதிய முறைக்கமைய, இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் 2016ஆம் ஆண்டளவில் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அடையாள அட்டையை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், இதற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.எம்.எஸ் சரத்குமார மேலும் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதியமைச்சர் காலமானார்-

கலாசார மற்றும் சமய விவகார முன்னாள் பிரதியமைச்சரும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பேராசிரியர் ஏ.வி.சுரவீர தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார். ஊடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண ஆட்டோ சாரதிகளுக்கு புதிய வீதி ஒழுங்கு முறை-

northern-வடமாகாணத்தில் ஆட்டோ சாரதிகளுக்கான புதிய வீதி ஒழுங்கு முறைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திலுள்ள மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்து அவர்களுக்கு நேர்மையான சேவையினை வழங்கும் பொருட்டே இந்த புதிய திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண உறுப்பினரின் ஒளிநாடா பொலிஸாரால் அபகரிப்பு-

LK policeதனது வீடியோ கமராவின் ஒளிநாடாவை முள்ளியவளையில் வைத்து பொலிஸாரால் கடந்த 12ஆம் திகதி அபகரித்துச் சென்றுவிட்டதாக வடமாகாணசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளியவளை கணுக்கேணி கிழக்கில் இலவச கண்ணாடி வழங்குவதற்கான பரிசோதனைகளை வவுனியாவிலுள்ள வைத்தியசாலை மற்றும் கொழும்பிலுள்ள விஷன் கெயாருடன் இணைந்து கடந்த ஞாயிறன்று மேற்கொண்டிருந்தோம். அதில் 150பேர் பங்குபற்றியதுடன் 93பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தோம். Read more