கொக்குவில் நாமகள் வித்தியாலய பொங்கல் விழாவும் கால்கோள்விழாவும்-

cvcvcvcvcயாழ். கொக்குவில் நாமகள் வித்தியாலயத்தில் பொங்கல் விழாவும், தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கால்கோள்விழாவும் அதிபர் திரு. சிவநாதன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்றுகாலை 9.30அளவில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. அருணாசலம் அகிலதாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பெருமளவிலானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த வைபவத்தின்போது தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்கள் வைபவ ரீதியாக வரவேற்கப்பட்டனர். அத்துடன் சிறுபிள்ளைகளின் கலைநிகழ்வுகளும், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கோப்பாய், கந்தர்மடம் பாடசாலை கால்கோள்விழா- வட மாகாணசபை உறுப்பினர் த. சித்தார்த்தன் பங்கேற்பு-

sssssயாழ். கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயத்தில் தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கால்கோள்விழா நேற்றுக்காலை 9.30மணியளவில் அதிபர் திரு. ஆனந்தராஜா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். இந்த வைபவத்தின்போது புதிய மாணவர்கள் வைபவ ரீதியாக மகிழ்ச்சிகரமாக வரவேற்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து யாழ். கந்தர்மடம் சைவப்பிரகாசா வித்தியாசாலையில் தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கால்கோள்விழா அதிபர் திரு. இராமநாதன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், கல்வி ஆலோசகர் திருமதி மரியதாஸ் அவர்களும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரும் கலந்துகொண்டிருந்தனர்.

தம்பிராசாவின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம்-

efe1போரினால் இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் வாழும் வலிகாமம் வடக்கு மற்றும் சம்பூர் மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும், வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டவருமான தம்பிராசா நேற்று 16ஆம் திகதி முற்பகல் 11.04 அளவில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். தனது கோரிக்கைகள் அடங்கிய ஜனாதிபதிக்கான மகஜரை அவர் நேற்று யாழ். அரச அதிபரிடம் கையளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று(17.01.2014) தன்னைச் சந்தித்து செவ்வியொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக வந்த ஒரு ஊடகவியலாளர், தனது உண்ணாவிரதப் போராட்டம் சுயநல நோக்கம் கொண்டதென்றும், பல இணையத்தளங்கள் இது சம்பந்தமாக தங்களது அபிப்பிராயங்களை வெளியிட்டிருப்பதாகவும் தெரிவித்ததாக கூறினார். இதுபற்றி தம்பிராசா மேலும் கூறுகையில்,
thampi..தமிழ் தேசியத்தைக் கட்டிக்காப்பதற்காக பாடுபடும் இணையதள உரிமையாளர்களோ அல்லது தமிழ் தேசியத்திற்காக தங்களை அர்ப்பணிப்பதாக கூறி வாழ்ந்துகொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளோ அல்லது மக்கள் நலனில் அக்கறைகொண்ட எவராக இருந்தாலும் நான் முன்னெடுத்திருக்கின்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தாம் முன்னெடுப்பதாக கூறி இதனைக் கைவிடும்படி கூறுவார்களாக இருந்தால் அல்லது அம்மக்களுக்கான உதவியினை தாம் பெற்றுக்கொடுப்பதாகவும் இதைவிட்டு ஒதுங்கும்படியும் கூறுவார்களாக இருந்தால் நான் எந்நேரமும் இதைவிட்டு ஒதுங்கத் தயாராகவே இருக்கின்றேன். ஆனால் அவர்கள் சரியான காரணங்களை கூறவேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இரவு நேரங்களில் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.