வவுனியா காத்தான்கோட்டத்தில் மக்கள் சந்திப்பு-
வவுனியா காத்தான்கோட்டத்தில் நேற்றையதினம் மாலை 4மணியளவில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் புளொட் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன்(விசு), புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழகத் தலைவருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான தியாகராஜா, இந்திரராஜா மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா கிளை முக்கியஸ்தர்களான குகன், ராஜா ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இக்கலந்துரையாடலில் காத்தான்கோட்டம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், கோயில் தலைவர், ஊர்ப் பிரமுகர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்ததுடன், தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலின்போது மக்களின் அன்றாட பிரச்சினைகள், அத்தியாவசிய தேவைகள் மற்றும் கிராமத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.