Header image alt text

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஜனாதிபதியினால் புற்றுநோய் வைத்தியசாலை திறந்துவைப்பு:-

10(1477)‘வடக்கு – தெற்கின் இணைப்பிற்கு பாலமாக ‘கலர்ஸ் ஒப் கரேச்’ நிறுவனத்தின் இரு இளைஞர்கள் முன்மாதிரியாக செயற்பட்டில் 300 மில்லியன் ரூபா நிதியில் 120 கட்டில்களைக் கொண்ட இந்த புற்றுநோய் வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக 19.01.14 ஞாயிற்றுகிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நாட்டில் 5 புற்றுநோய் வைத்தியசாலைகள் இருக்கின்றன. அதில் 5 ஆவதாக யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த வைபவத்தில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன,டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏரான் விக்ரமரட்ண, ஹர்ஷ டி சில்வா, விஜயகலா மகேஷ்வரன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பியான சில்வஷ்டர் அலன்டின், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க வடமாகாண சபையின் உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுஜிர்தன் வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் ஆகியோரும் பங்கேற்றனர். Read more

கிளிநொச்சியில் உழவர் பெருவிழா:-

untitled32013ஆம் ஆண்டுக்கான சிறந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களையும் பாற்பண்ணையாளர்களையும் தெரிவு செய்வதற்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களைக் கௌரவிக்கும் முகமாக வடமாகாண விவசாய,கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடாத்திய உழவர் பெருவிழா நேற்று 18.01.14 சனிக்கிழமை கிளிநொச்சியில் கூட்டுறவுக் கலாசாரமண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதல்வர் க.வி விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களும் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். தழிழகத்திலிருந்து வருகைதந்திருந்த கவிஞர் யுகபாரதி தலைமையில் உழவே எங்கள் உயிர் என்ற தலைப்பில் கவியரங்கமும், வவுனியா நிருத்திக நிகேத கலாமன்ற மாணவ மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மண்டபம் கொள்ளாத அளவுக்கு ஆயிரக்கணக்கான விவசாயப் பெருமக்கள் பார்வையாளர்களாக ஆர்வத்தோடு பங்கேற்றிருந்தனர். 2008ஆம் ஆண்டுக்;குப் பிறகு கிளிநொச்சியில் மிக அதிக எண்ணிக்கையானோர் திரண்டிருந்த ஒரு பெருவிழாவாக இது கருதப்படுகிறது

ulavar-vizha1ulavar-vizha18pongal-4pongal-1

உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தம்பிராசா மீது கழிவொயில் வீச்சியுள்ளனர்

1வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த வலியுறுத்தியும் இடம்பெயர்ந்த மக்களுக்கு இடைநிறுத்தப்பட்ட நிவாரணத்தை மீண்டும் வழங்கக் கோரியும்
யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை முதல் உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் கழிவொயில் வீச்சியுள்ளனர். இதுதொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.